பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

411 தமிழ் தந்த செல்வம் திருமதி. தமிழ்ச்செல்வம் முத்தையா வாத்தியார்-கனக சுப்புரத்தினம் நாட்டுக்குப் பெரிய பாவேந்தராக இருக்கலாம். ஆனால்-வீட்டுக்குத் தாத்தா என்பதில் ஐயமில்லை. பாட்டுத் தாத்தாவின் உறவு பேரன் பேத்தியிடம் எவ்வாறு இருந்தது என்பதை, இக்கட்டுரை படம்பிடித்துக் காட்டுகிறது. காங்கிரசும் கோழிக்கறியும் காமராசருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் என்பது நாடறிந்த செய்தி. அவருக்குப் பாவேந்தரை மிகவும் பிடித்திருந்தது என்ற செய்தி பலருக்குத் தெரியாது. பாவேந்தரின் விருந்தாளியாகக் காமராசர் புதுவை வந்திருந்த போது தமது பிஞ்சு நெஞ்சில் பதிவான காட்சிகளைக் கொஞ்சு தமிழில் கூறுகிறார். பாவேந்தரின் மகள் வழிப் பேத்தி தமிழ்ச் செல்வம் முத்தையா. 'அடடே தின்னும்மா!' என்று ஆப்பிள் பழத்தை அன்போடு தந்த தாத்தாவுடன் அன்று புதைக்கப்பட்ட தமது ஆசைகளைக் கண்ணிர்க் கதையாக்கிக் காட்டுகிறார் பேத்தி. 1952ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டு ஆம். அதுதான் என் பிறந்தநாள். நிறைமதி நாளன்று நான் பிறந்தபோது எதிர்வீட்டு அம்மாள் பார்க்க வந்தார்களாம். "அக்டோபர் 2-ஆம் தேதி பிறந்திருக்கிறாள். இன்று காந்தியின் பிறந்த நாள். காந்திமதி என்று பெயர் வையுங்கள்” என்று சொல்லிச் சென்றார்களாம்.