பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அந்தநாட்கள் வந்திருந்த வேறு சில நண்பர்களும் "ஐயா! நீங்கள் நாட்டுக்குப் பொதுவானவர்; தமிழரின் பொதுச் சொத்து. உங்களுக்கு இனிக் கட்சி அரசியல் வேண்டாம்” என்று வற்புறுத்திக் கூறியதுதான். பிறவி அரசியல்வாதியான பாவேந்தரால் அரசியல் இல்லாமல் இருக்க முடியுமா? திராவிட முன்னேற்றக் கழகம் விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டது. நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான தோழர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றனர். போராட்டக் காலத்தில் நாட்டில் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றன. உடனே பாவேந்தரின் அரசியல் பேனா நெருப்பைக் கக்கத் தொடங்கியது. 1.8.62இல் வெளியான கடைசிக் குயில் கீழ்க்கண்ட அரசியற் கண்டனப் பாடலோடு முற்றுப் பெற்றது. மணப்பந்த லுக்குத்தீ வைத்தார் கழகப் பிணப்பந்த லுக்குக்கால் நட்டார்-பணத்துக்குத் தீட்டிய திட்டம் சிவசிவா! ஊர்ப்பெயரால் ஒட்டிய ஓட்டை வண்டி தூள் கவிஞர் பெருமன்றத் துவக்கவிழா முடிவுற்றதும் வந்திருந்த கவிஞர்கள் யாவரும் மாலை ஆறுமணியளவில் பாவேந்தரிடம் விடை பெற்றுச் சென்றனர். நான் மட்டும் அங்கு இருந்தேன். இரவு எட்டு மணி ஆயிற்று. நீண்ட கருப்புக்கார் ஒன்று பாவேந்தர் வீட்டுக்குப் படகுபோல் வந்து நின்றது. பெருமிதமான தோற்ற முடைய ஒருவர் அதிலிருந்து இறங்கி உள்ளே வந்தார். பாவேந்தர் அவரை அன்போடு வரவேற்றார். இருவரும் மகிழ்ச்சியோடு அரைமணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் விருந்துண்ணத் தொடங்கினார். மிகவுயர்ந்த புலால் உணவும், வெளிநாட்டு விஸ்கியும் விருந்தில் இடம் பெற்றன. அவர்கள் இருவரும் விருந்தை முடிக்கும்போது மணி 9.30. அதற்குமேல் பொன்னடியும் நானும் சாப்பிட உட்கார்ந்தோம். நான் பொன்னடியைப் பார்த்து “யாரிந்தச் சிறப்பு விருந்தினர்?" என்று கேட்டேன். "அவர் வருமான வரித்துறையில் பெரிய அதிகாரி' என்றார் பொன்னடி. "இவர் அடிக்கடி வருவாரா?” என்று கேட்டேன். "ஆமாம்! இன்னும் பல பெரிய அதிகாரிகளும் வருவர்" என்றார் பொன்னடி, "விருந்துச் செலவு யாருடையது?’ என்று கேட்டேன். "எல்லாம் பாவேந்தருடையதுதான். இது பெரிய இடத்துச்