பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் - 421 வசதியாக, ஏ.கே. வேலன் இருந்த நேரம், சென்னை இல்லத்தில் நான் அவரைப் பார்க்கச் சென்றபோது, தொலைபேசி மணி ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது. ஆடு நாற்காலியில் (Rocking Chair) அமர்ந்த வண்ணம் அவர் பேசிக் கொண்டிருந்தார். ஆடம்பரமான "சினிமாத்தனம் அவரைச் சூழ்ந்திருந்தது. பாவேந்தர் கடிதத்தை அவரிடம் பணிவாக நான் கொடுத்தேன், அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு, நடிப்பில் முன் அனுபவம் உனக்குண்டா? என்று என்னிடம் கேட்டார். நான் இல்லை என்றேன். அப்படியென்றால் ஏதாவது ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து நடி. எவனாவது பார்ப்பா கூப்பிடுவான். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். எல்லாம் அப்படிதான் வளர்ந்தாங்க. போ!' என்று முகத்தில் அடித்தாற்போல் பேசினார். என்னை அவர் ஒருமையில் அழைத்த முறையும் பதில் சொன்ன முறையும், என்னையோ அல்லது பாவேந்தரையோ அவர் மதித்துப் பேசியதாகத் தெரியவில்லை. நான் ஏமாற்றத்தோடு ஊர் திரும்பினேன். பாவேந்தரை மறுமுறை சந்தித்தபோது கூட, திரு.ஏ.கே. வேலன் என்ன சொன்னார் என்பதை அவரிடம் சொல்லவில்லை. வீணாக அதைச் சொல்லிப் பாவேந்தர் உள்ளத்தைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. >k பிறகு எதிர்பாராமல் புதுவையில் ஒரு முறையும், தியாகராய நகர் உயர்நிலைப்பள்ளி இலக்கிய விழாவில் ஒரு முறையும் பாவேந்தரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்போதெல்லாம் என் நலத்தை அக்கறையோடு விசாரிப்பார்; தம்மை இல்லத்தில் வந்து பார்க்கும்படி கூறுவார். நான் அப்போது சென்னை-ஈரோடு ரயில் அஞ்சல் பிரிப்பாளராக இருந்தேன். வாரத்தில் மூன்று நாள் பகலில் ஒய்வு. பாவேந்தர் அப்போது போயஸ் ரோடு கமலா கோட்னிஸ் வீட்டில் குடும்பத்தோடு குடியிருந்தார். நான் அடிக்கடி வீட்டுக்குச் சென்று பாவேந்தரைப் பார்த்து பேசிவிட்டுத் திரும்புவேன். பாண்டியன் பரிசைத் திரைப்படம் ஆக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய பிறகு, தி.நகர் இராமன் தெருவில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் குடிபுகுந்தார் பாவேந்தர் பாரதிதாசன் பிக்சர்ஸ்' என்ற விளம்பரப் பலகை பங்களா முகப்பை அணி செய்தது. காரும், சோபாவும், எடுபிடி ஆட்களும், விருந்தும் வேடிக்கையுமாக இராமன் தெரு வாழ்க்கை அப்போது அவருக்கு அமைந்திருந்தது. கவியரசருக்கு ஏற்ற கம்பீர வாழ்க்கை அது.