பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 425 பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் படத்தில் இந்தப் பெண்ணுக்கு வாய்ப்புக் கொடுக்கப் போகிறீர்களா? என்று நான் மெதுவாகக் கேட்டேன். ஏதோ கனவிலிருந்து விடுபட்டவர் போல எங்களைப் பார்த்து விட்டு. 'பாரதியார் மனைவி செல்லம்மாள், வயசில் இந்தப் பெண் மாதிரி தான் இருப்பாங்க என்று சொன்னார் பாவேந்தர். உடனே அங்கிருந்த அத்தனை கண்களும் ஆர்வத்தோடு அந்தப் பெண்ணையே உற்றுப் பார்க்கத் தொடங்கின. அந்தப்பெண் மேலும் நாணினாள். >k பாவேந்தர் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் தேநீர் அருந்திவிட்டு மான்தோல் விரித்த சோஃபாவில் வந்து அமர்வது வழக்கம். மாலையில் இலக்கிய அன்பர்கள் சிலர் அவரைத் தேடி வருவார்கள். அரசியல்,இலக்கியம்-இரண்டும் அவர் பேச்சில் மிகுதியாக அடிபடும். தமிழ் இலக்கியத்தில் அவரே சில ஐயங்களைக் கிளப்பி விளக்கமும் சொல்வார்; மற்றவர் எழுப்பும் ஐயங்களுக்கும் விளக்கம் தருவார். ஒரு நாள்... மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்பார்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி?என்ற சித்தர் பாட்டு வரிகளை எடுத்து வைத்துக் கொண்டு விளக்கம் சொன்னார். 'மாங்காய்ப்பால் சாப்பிட்டு விட்டு நீண்ட நாள் உயிரோடு இருக்க முடியுமா? இதில் ஒரு தத்துவம் இருக்கிறது. ஞானி உட்கார்ந்தால் பல மாதம் சாப்பிட மாட்டான். எப்படி? அவன் உடலிலிருந்தே அவனுக்கு உணவு கிடைக்கிறது. மூளையிலிருந்தே சுரக்கும் ஒருவகை நீர் அவனை வாழவைக்கிறது என்றார் பாவேந்தர். >k ஒருநாள் பாவேந்தருக்குக் கடன் கொடுத்திருந்த ஒருவர் அவரை வந்து பார்த்துப் பேசிவிட்டுச் சென்றார். பாவேந்தர் தலையணையில் சாய்ந்த வண்ணம் சிந்தனையோடு படுத்திருந்தார். நான் மெதுவாக அவர் அறைக்குள் சென்று எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். பாவேந்தர் என்னைப் பார்த்து "வாழ்க்கைன்னு இருந்தா கொடுத்து வாங்கல் இருக்கணும். இல்லைன்னா வாழ்க்கை சப்புன்னு இருக்கும். வள்ளுவர் கூட இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மா ஞாலம் மரப்பாவை சென்றுவந்தற்றுன்னு சொல்றார்” என்று சொல்லிவிட்டு அவரே சிரித்துக்கொண்டார். அவர் உள்ளத்தின் ஒட்டத்தை