பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 பற்சேர்க்கை வேண்டியவர். சேலம் வரும்போதெல்லாம் அழகிரிசாமிக்கு இவர் தாராளமாகப் பொருளுதவி செய்து வந்தார். நான் ஒருமுறை பி.ஆர்.பி.யை, என்தம்பி முருகரத்தனத்தின் அலுவல் தொடர்பாகக் காண்பதற்கு மாமாங்கம் சென்றிருந்தேன். அப்போது பாவேந்தரைப்பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்னார்: "பாரதிதாசன் சேலம் வந்தா வீட்டுக்கு வருவார். பயில்வான் மாதிரி இருப்பார். ஏதாவது கேட்டா ஆ.ங். என்று குரல் கொடுத்துவிட்டு நம்மைப் பார்ப்பார். அவர்கிட்டப் பேச நானே பயப்படுவ. என் மகளுக்குத் திருமணம், பெரியார் முதல் பல அரசியல் தலைவர்களும் வந்திருந்தாங்க. பாவேந்தரும் வந்து வாழ்த்துரை வழங்கினார். திருமணம் முடிஞ்சு ஊருக்கு அவர் புறப்பட்டப்ப ஒரு நூறு ரூபா நோட்டைக் கவர்லே போட்டுக் கொடுத்தேன். என்ன ரத்தனசாமி! நான் உங்க குடும்பத்தில் ஒருவன் இல்லையா? நம்ம வீட்டுத் திருமணம் என்று சொல்லி வாங்க மறுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டார். 3. தலையைக் குனியாதே பெரியார் மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் என் நண்பர் வெங்கிடு ஆண்டுதோறும் செப்டம்பர் திங்களில் அண்ணா பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார். இரண்டு நாட்கள் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமண்டபம் என்று கோபியே அமர்க்களப்படும். அப்போது வழக்கமாகக் கூடும் நண்பர்களுள் இப்போது அரசவைக் கவிஞராக இருக்கும் புலமைப்பித்தன், புலவர் பொன்னி வளவன், கவிஞர் குடியரசு, ஈரோடு நகைச்சுவை அரசு ஆறுமுகனார், புலவர் எழில்வேலன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். புலவர் புலமைப்பித்தனுக்குக் கோபி மாமியார் வீடு. எங்கள் தேவைகளை அவர்தாம் கவனித்துக் கொள்வார். விளையாட்டுப் பேச்சும், வேடிக்கையுமாக இரண்டு நாட்களும் போவது தெரியாது. வழக்கமாகக் கோபி விழாவின்போது அங்கிருக்கும் பொதுப்பணித்துறைப் பயணியர் விடுதி நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அப்போது பெரியவர் கோபி ராஜூ அங்கு நாள்தோறும் குதிரை வண்டியில் வருவார். பொதுப்பணித்துறை விடுதியில் தங்கி நாள்தோறும் தம்மைத் தேடிவரும் கட்சிக்காரர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார். அப்போது அவர் தி.மு.க. மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.). கோபி ராஜுக்கு அப்போது வயது எழுபதுக்குப் பக்கமாக இருக்கும். கருத்த தோற்றம். தடித்த உருவம். கண்பார்வை சற்று மங்கலாக இருக்கும். பட்டுக்கோட்டை அழகிரிசாமி, பூவாளுர் பொன்னம்பலனார் போன்ற பழைய சுயமரியாதை இயக்கத்