பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ll ந்தர்-ஒருபல்கலைக்கழகம் 435 தலைவர்களின் வரிசையைச் சேர்ந்தவர். அந்த வயதிலும் மேடையேறினால் அஞ்சாமையோடு மேடையே அதிரும்படி பேசுவார். கல்லெறிக்கு அஞ்சாமல், குத்துவாளை எடுத்து மேடை மீது போட்டுவிட்டுச் சுயமரியாதைக் கூட்டங்களில் பேசிப் பழக்கப்பட்டவர். சுயமரியாதை இயக்கத்தோடு ஒன்றி வளர்ந்தவர். விடுதிக்கு வரும்போதெல்லாம் சுயமரியாதை இயக்கத்தின் பழைய செய்திகளை எங்களுக்கு எடுத்துரைப்பார். நாங்கள் ஆர்வத்தோடு கேட்போம். ஒருநாள் பாவேந்தரோடு நீங்கள் பழகி இருக்கிறீர்களா? என்று நான் அவரைக் கேட்டேன். 'நன்றாகப் பழகியிருக்கிறேன். இந்தப் பக்கம் கூட்டங்களுக்கு வரும்போது நான் அவரைச் சந்தித்துப் பேசியதுண்டு. புதுச்சேரிப் பக்கம் கூட்டத்துக்குச் சென்றால் நானும் அவரை வீட்டில் சென்று பார்ப்பதுண்டு. பாரதிதாசனிடத்தில் உள்ள முக்கிய குணம் அஞ்சாமைதான். அவர் நின்று கொண்டிருந்தாலும் உட்கார்ந்து கொண்டிருந்தாலும் நிமிர்ந்த நிலையில்தான் காட்சியளிப்பார். ஒருமுறை நான் புதுச்சேரியில் அவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவரோடு கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் மகன் கோபதி கல்லூரிக்குப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தான். நாங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததால் கையில் புத்தகக் கட்டோடு, அடக்கமாகக் குனிந்த தலையோடு அவன் சென்று கொண்டிருந்தான். பாரதிதாசன் டேய்! கோபதி! இங்க வா!' என்று அவனைக் கூப்பிட்டார். அவனும் வந்தான். தலையக்குனியாதே! நிமிர்ந்து நட! என்று கட்டளையிட்டார். அப்போது நிமிர்ந்த கோபதியின் தலை மறுபடி குனிந்ததில்லை! என்று சொன்னார் கோபிராஜு. 4. எப்படிப்பட்ட கலைஞன் அவன் திருச்செங்கோடு மாவட்டக்கழக உயர்நிலைப்பள்ளியில் 1944-45இல் நான் மாணவன். திருவாளர் சேஷசகிரிராவ் பி.ஏ. எல்.டி. பள்ளித் தலைமையாசிரியர். திராவிடர் கழகம் அப்போது வளர்ந்து கொண்டிருந்த நேரம். திராவிட நாட்டையும், குடியரசு வார இதழையும் டெஸ்க்குக்குள் மறைத்துப் படித்துக் கொண்டிருப் போம். அப்போது நானும் என் நண்ர்கள் சிலரும் துணிந்து கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு போவோம். அவர்களுள் நெய்க்காரப்பட்டி நடேசனும், சண்முகசுந்தரமும் (திருவள்ளுவர் டெக்ஸ்டைல்ஸ், ஈரோடு) குறிப்பிடத்தக்கவர்கள். ஒய்வு நேரத்தில் எங்களுக்குப் பாசறையாக விளங்கியது திருவாளர்