பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 பிற்சேர்க்கை அடிக்குறிப்புகள் 1. பாரதிதாசன் மீசை (23ஆம் பக்க அடிக்குறிப்பிற்குரியது) களிற்றுநிரை பலவற்றை வெற்றி கண்டு காடதிர வேமுழங்கி இறுமாப் போடு மலைக்குகையில் வீற்றிருக்கும் அரிமாப் போல மாக்கவிஞன் வீற்றிருந்தான் வாயில் இட்டுக் குழைக்கின்ற புகையிலையைச் சுருட்டாய்ச் சுற்றிக் குண்டலமாய்ப் புகைவிட்டான். அவன் தமிழ்வாய் விளைக்கின்ற கரியபுகை தமிழ் மணந்து வீசியது நாற்புறமும் வியப்பில் ஆழ்ந்தேன். "பெண்ணின்பம் தனைவடித்துப் பண்ணைக் கூட்டிப் பேரின்பப் பாடல்களாய் ஆக்கித் தந்த வெண்ணெய்ச்சொல் பாரதிக்குத் தாச உம்மை வேடிக்கையாய்ஒன்று கேட்க ஆசை எண்ணிச்சொல் பாரதியின் முறுக்கு மீசை இமயத்தைப் போல்நிமிர்ந்து விண்ணைக் குத்தக் கன்னத்தில் மோதுகின்ற உமது கவிழ்ந்துநிலம் நோக்குவதேன்?" என்று கேட்டேன் இன்றமிழில் தேன்பிலிற்றி வண்ணங் கூட்டி இசைப்பாடல் பாடுகின்ற கவிதை வேந்தன் கன்னத்தில் மின்னல்விழச் சிரித்தான் நெஞ்சக் கற்பனையைத் தட்டிவிட்டான் என்னை நோக்கி "எண்ணத்தில் உயர்ந்திருக்கும் சிறந்த ஆசான் எதிர்நிற்கும் மாணவர்கள் கவிழ்ந்திருந்து மண்ணைத்தான் பார்ப்பார்கள் என்று சொல்லி மறத்தமிழன் மெதுவாகப் புன்ன கைத்தான். "தித்திக்கும் முக்கனியைச் செழித்த கொய்யாத் தீங்கனியை வெறுத்தவெளவால் உமது வாயில் பாவேந்தர் மீசை பற்றி தொடக்கநிலையில் ஆசிரியர் பாடிய பத்து எண்சீர் விருத்தங்களில் சில இங்கே தரப்பட்டுள்ளன. -