பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

un৫s"ী-ঔচ பல்கலைக்கழகம் 45 ஆண்டுதோறும் இந்திய ஜனாதிபதி முன் தில்லியில் நடைபெறும் பன்மொழிக் கவியரங்கத்திற்குத் தமிழகத்தின் சார்பில் மேலிடச் செல்வாக்குப் பெற்ற ஊர்பேர் தெரியாத கவிஞர்களே அனுப்பப்படுகின்றனர் என்பதைப் பற்றி நாங்கள் பேசியபோது, புதுச்சேரியில் அவர் ஆசிரியப்பணியில் இருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை நகைச்சுவையோடு எடுத்துக் கூறினார். "சேஞ்சான்னு ஒருத்த...” "என்ன சொன்னிங்க?" என்றேன் நான். "செயிண்ட்ஜான் அவனோடு பேர். காரைக்காலிலே அவன் ஒரு அவுக்கா (வழக்குரைஞர்). அவனை சேஞ்சான்... சேஞ்சான்னு எல்லாரும் கூப்பிடுவோம். வழக்குரைஞர் பட்டம் பெற இவன் பிரெஞ்சு நாடு போயிருந்தான். ஏதோ தமிழறிந்ததா அங்கே காட்டிக்கிட்டான். அவன் புதுச்சேரி திரும்பி வந்ததும் பிரெஞ்சு அரசாங்கம் அவனைத் தமிழ்த் தேர்வுக் குழுவோட தலைவனா ஆக்கிட்டாங்க. அவனுக்குத் தமிழுந் தெரியாது ஒரு மண்ணுந்தெரியாது. புதுவையிலே ஒரு தமிழ்த்தேர்வு நடந்தது. அந்தத் தேர்வோட வினாத்தாளிலே கல்லாதான் ஒட்பம்' என்று தொடங்கும் குறள் இடம் பெற்றது. அந்தப்பாட்டு சேஞ்சானுக்குப் புரியல. கல்லாதான் நொட்டமா, கல்லாதான் ஒட்டமா, கல்லாதான் ஒட்டமான்னு' அவனுக்கு ஐயம். கடைசியிலே கல்லா தான் ஒட்டம் கழிய நன்றாயினும்னு வினாத் தாளிலேயே அச்சுப் போட்டுட்டான். இது என் கவனத்துக்கு வந்துச்சு விடைத்தாள்களை நானே திருத்தி மதிப்பெண் போட்ட அதுக்குப் பிறகு புதுச்சேரியிலே தமிழைப் பொறுத்தவரையிலும் எந்த ஐயமுன்னாலும் போ.சுப்புரத்தினத்துக்கிட்டன்னுதா சொல்வாங்க இதை எதுக்குச் சொல்றன்னா எந்த விதத்திலும் தகுதியில்லாதவன்தா வெளியுலகுக்குப் போயித் தன்னைக் கவிஞனென்றும், அறிஞனென்றும் விளம்பரப்படுத்திக்கறா” என்று குறிப்பிட்டார். இரவு மணி பன்னிரண்டாகி விட்டது; தூக்கம் வரும் போலிருந்தது. அப்போது பாவேந்தர் தாமே மதுவைப் பற்றிப் பேசத் தொடங்கினார். "நான் வாரத்திலே இரண்டு மூன்று நாள் மட்டும் அளவோடு குடிப்பது வழக்கம் அளவோடு குடிப்பது உடம்புக்கும் நல்லது. எங்க பக்கத்திலே இது உணவு மாதிரி. வீட்டில் பெண்களே கொஞ்சம் ஊற்றி உணவுக்கு முன்னால அளவோடு கொடுப்பாங்க. எப்போதுமே, குடிப்பது குடிப்பதற்காக என்பது தவறான கொள்கை. குடிப்பது உணவைச் சுவைத்துச் சாப்பிடுவதற்குத் துணை செய்ய வேண்டும். அந்த அளவுதான் குடிக்கணும். நீ புதுச்சேரி வந்தா பார்க்கலாம். புதுச்சேரிக்கார எவனும் அளவுக்கு மீறிக்