பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 47 "அவர் பஸ் முதலாளியாயிற்றே. உங்களுக்கு ஒரு கார் அனுப்பக் கூடாதா?’ என்று நான் கேட்டேன். "அனுப்பலாம்" என்று சொல்லிவிட்டு, அங்கே நின்று கொண்டிருந்த கோவிந்தராசனைக் காட்டி, 'இவனை அவர் எப்படி மதிக்கி றாரோ?” என்று கூறினார். அதற்குள் உந்து வண்டி வந்து விட்டது. அவரை வண்டியில் ஏற்றிவிட்டு நான் கல்லூரி சென்றேன். 2.2.62 மாலை 6 மணியளவில் கவிஞர் இல்லம் சென்றேன். குடியேற்றம், விழுப்புரம் தேர்தல் கூட்டங்களை முடித்துக் கொண்டு 31.1.62 புதன்கிழமையே கவிஞர் சென்னை திரும்பிவிட்டார். மூன்று நாட்களாகக் கவிஞரைப் பார்க்காதது என்னவோ போல் இருந்தது. அறைக்குள் நுழைந்தபோது மேனாட்டு முறையில் கோட்டும் சூட்டும் அணிந்த ஒர் இளைஞர் பாவேந்தரின் கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே இங்கு வேரில் பழுத்த பலா என்ற பாடலை ஈடுபாட்டோடு பாடிக் கொண்டிருந்தார். பாடும் பாணியும் குரலும் கூடக் கணிரென்று சிதம்பரம் ஜெயராமனுடையதைப் போல் இருந்தன. அவருக்கு எதிரில் மற்றொரு நண்பரும் உட்கார்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்ததும் மிக்க ஆர்வத்தோடு, "வா! எங்கே மூணு நாளாக் காணோம்? தோ. இவர் கவிஞர் தஞ்சைவாணன் எம்.ஏ. சட்டக் கல்லூரி மாணவர். இவர் (எதிரில் இருந்தவர்) ம்யூசிக் டைரக்டர் பல படங்களுக்கு இசையமைக்கிறார்” என்று அறிமுகப்படுத்தினார். என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும்போது, "இவர் முருகுசுந்தரம் எம்.ஏ. பெரிய கவிஞர், சேலம் காலேஜிலே புரொபசர். எனக்கு ரொம்ப வேண்டியவர்" என்று சொன்னார். "அரங்க. ராமானுஜம் என்பது கவிஞர் தஞ்சைவாணனின் இயற்பெயர். "என்புதோல் போர்த்த உடம்பு’ என்று வள்ளுவர் பெருமான் வகுத்த வைரவரிகள் வேறு யாருக்குமல்ல; இவருக்குத்தான். நாகரிகமாகச் சொன்னால் நடக்கும் கோல் என்று சொல்லலாம். தம்முடைய பூஞ்சை உடம்பைச் சற்றுப் பார்ப்பவர் கண்ணில் பெரிதுபடுத்திக் காட்டுவதற்காக எப்போதும் மொத்தமான கோட்டணிந்து காட்சியளிப்பார். பாவம்! இப்போது எப்படி இருக்கிறாரோ? சென்னை தொலைக்காட்சி நிலையத்தில்