பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அந்தநாட்கள் நுழைந்தபோது, அவருடைய மீசையைப் பற்றி முதலில் நான் எழுதிக் கொடுத்திருந்த பாடலைத் திருத்திக் கொண்டிருந்தார். நான் அப்போது கவிதைத் துறையில் கற்றுக் குட்டி. என் பாட்டில் பல பிழைகள் இருந்தன. அப்பிழைகளையெல்லாம் திருத்தி முடித்த பின், தாம் திருத்தியதற்குச் சான்றாக மூன்று இடத்தில் கையெழுத்திட்டுத் தேதியும் குறிப்பிட்டார். அச்சுவடியை இன்றும் பொன்னே போல் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். பொதுவாக மரபுக்கவிதை எழுதுபவர்களிடம் காணப்படும் பிழைகள் இரண்டு. ஒன்று குற்றியலுகரப் பிழை; மற்றொன்று 'எந்தன், உந்தன் பிழை. இன்று மிக்க விளம்பரம் பெற்றிருக்கும் பெருங்கவிஞர்களின் நூல்களைப் புரட்டினாலும் இப்பிழைகள் மலிந்திருக்கக் காணலாம். ஒரு பெருங்கவிஞரிடம் இதைப் பற்றிக் குறிப்பிட்டுக் கேட்டபோது, "இருந்தால் என்ன? குற்றியலுகரம் புணர்ந்தால் தானே கெடும்? நான் பிரித்துத்தானே எழுதி யிருக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார். என்னுடைய பாடல்களில் இருந்த இவ்விரு பிழைகளையும் கோடிட்டுக் காண்பித்துப் பள்ளி மாணவனுக்குப் பாடம் நடத்துவது போல் அவ்வளவு எளிமையாக இலக்கணப் பாடம் நடத்தினார். குற்றியலுகரத்தின் வகைகளையும், புணர்ச்சி விதியையும் எழுதிக் காட்டிப் பொறுமையோடு விளக்கினார். என்+தன்-என்றன் உன்+தன்-உன்றன் எம்+தம்-எந்தம் உம்+தம்-உந்தம் 'எந்தன்', 'உந்தன்' என்ற சொற்களே தமிழில் இல்லை. இவையெல்லாம் தெரியாமல் கவிதை எழுத வரக்கூடாது என்று கடுமையாகவே சொன்னார். இவ்விலக்கணப் பாடம் அவர் நடத்தியபோது கவிஞர் பொன்னடியும் என் அருகிலிருந்தார். 'எந்தன், உந்தன் இலக்கண விவகாரத்தில் பாவேந்தர் எப்போதுமே கடுமையாக இருந்திருக்கிறார் என்ற செய்தி அவர் நடத்திய 31.3.59 குயில் ஏட்டில் தலையங்கமாகவே வெளியாகியுள்ளது. அது வருமாறு: