பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அந்தநாட்கள் சித்தியாரில் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் சான்றிருக்கிறது. அருள் நந்தி சிவாச்சாரியார் சுயமரியாதைக்காரரா? சைவ ஆகமங்கள் என்ன கூறுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் உடம்பெல்லாம் பட்டை பட்டையாகத் திருநீற்றைப் பூசிக்கொண்டு வந்தால் போதுமா?’ என்று சரமாரியாகப் பேசினேன். கேள்வி கேட்ட சைவர் திணறிப்போய் செய்வதறியாமல் உட்கார்ந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து நான் மேடையை விட்டு இறங்கியதும் அவரும் அவருடன் வந்த வேறு சில சைவர்களும் என்னிடம் வந்து, 'உங்கள் புலமையை அறியாமல் நாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டோம்; எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். 5.4.62 இன்று பாவேந்தருடைய திரைப்படத்துறை வாழ்க்கையைப் பற்றிக் கேட்டேன். அவர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து சொன்னார். அந்நிகழ்ச்சிகளை அவர் கூற்றிலேயே கொடுத்திருக்கிறேன். "நான் 1947ஆம் ஆண்டு முதல் 1953ஆம் ஆண்டு வரை மாடர்ன் தியேட்டர்ஸில் சில திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தேன். சுபத்ரா, சுலோசனா போன்ற புராணப் படங்களுக்கு முதலில் கதை வசனம் எழுத மறுத்தேன். பிறகு இராவணன், இந்திரசித்து போன்ற திராவிட வீரர்களின் வீரத்தைப் புலப்படுத்த வேண்டுமென்பதற்காகவே அவற்றுக்கு எழுத ஒத்துக் கொண்டேன். மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் திரு. டி. ஆர். சுந்தரம் மிகவும் கண்டிப்பானவர்; சிறந்த திறமைசாலி, பணத்திலும் கறாரானவர். எவ்வளவு பெரிய நடிகரும், எழுத்தாளரும், அவர் எதிரில் உட்கார்ந்து பேசி நான் பார்த்ததில்லை. என்னைத் தவிர வேறு எவரையும் அவர் அண்ணா என்று கூப்பிட்டு நான் கேட்டதில்லை. அவரிடம் சவுக்கடிப்பட்ட பிரபல நடிகர்களுண்டு. அவர் எதிரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நடைமுறை வேலைகள் இயந்திரம் போல் நடந்து கொண்டிருக்கும். டேய்!” என்று அவர் குரல் கொடுத்தால் மரம் செடிகள் கூட 1. சுபத்ரா. சுலோசனா இரண்டிற்கும் பாவேந்தரே கதை, வசனம் எழுதினார். ஆனால் ஜலகண்டாபுரம் ப.கண்ணன் பெயர் போட்டு அவை வெளியிடப்பட்டன.