பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 81 மாவட்டத்தில் முசிறி, பொன்பரப்பி ஆகிய ஊர்களில் பணியாற்றினார். இவர் நூற்றுக்கு நூறு பெரியாரின் கொள்கை களைக் கடைப்பிடிப்பவர். இவர் எந்தக் காரணத்துக்காகவும், எவருக்காகவும் - ஏன், அரசாங்கத்துக்குக்கூட-தம் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர். இதனால் வாழ்க்கையில் இவருக்கு எதிர்ப்புகளும் தொல்லைகளும் அதிகம். ஆனால் இவர் எந்த எதிர்ப்பையும் சமாளித்து, வெற்றியே கண்டவர். யாரும் எளிதில் உடைக்க முடியாத நெற்றுக் கொட்டை கவிஞர் பொன்னடியான்' தமிழ் மறவர் பொன்னம்பலனாரின் தயாரிப்பு. முசிறியில் நடந்த மாணவர் கிளர்ச்சியில் பொன்னம்பலனாருக்கு ஆதரவாக இருந்து, கிளர்ச்சியை முன்னிருந்து நடத்தியவர் பொன்னடியான். இதனால் பள்ளிப்படிப்புப் பாதிக்கப்பட்டு இருந்தபோது, பொன்னடி யானைப் பாவேந்தரிடத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தவர் பொன்னம்பலனாரே. பொன்னம்பலனார் தம் அடைமொழிக்கேற்பத் தோற்றத்தில் தமிழ் மறவராகவே காட்சியளிப்பார். எப்போதும் கருப்புச் சட்டைதான் போடுவார்; பள்ளிக்கும் கருப்புச் சட்டையோடு தான் வருவார். பெரியார் எப்போதும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிக்கைவிட்டபிறகு, எப்போதும் தமது கருப்புக் கோட்டுப் பையில் பிச்சுவா ஒன்றை வைத்துக் கொண்டிருப்பார். அளவு கடந்த தனித் தமிழ்ப்பற்று உடையவர். மறந்தும் பிறமொழிச் சொற்களைக் தம் பேச்சில் கலக்க மாட்டார். தனித்தமிழிலேயே பேச வேண்டும் என்பதில் பாவாணரைப்போல் இவரும் கண்டிப்பானவர். சேலத்தில் இருந்தபோது உணவு விடுதிகளுக்குச் சென்றால் சுவைமுறுக்கு (ஜிலேபி), சுவைக்கட்டி (மைசூர்பாகு) சுவைக்களி (அல்வா) காரக்கலவை (மிக்சர்) என்றுதான் கேட்பார். "ஒ என் சகோதரரே என்று தொடங்கும் பாவேந்தரின் சஞ்சீவிபர்வதத்தின் சாரல் வரிகளைத் தேர்வுத் தாளில் கொடுத்துக் கேள்வி கேட்டதற்காக அரசாங்கம் இவர் மீது நடவடிக்கை எடுத்தது. சேலம் நகராட்சிப் பள்ளியில் இவர் பணியாற்றியபோது இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மறவர் பொன்னம்பலனாரின் தொடர்பு பாவேந்தரின் இலக்கியப் போக்கில் பெரிய பாதிப்பை உண்டாக்கி, அவருடைய பாடல்களை அடியோடு மாற்றி விட்டது. பாவேந்தரே இதை என்னிடம் குறிப்பிட்டார். பாவேந்தரும் தமிழ்மறவரும் 1. பொன்னடியான் என்ற பெயர் பொன்னம்பலனாருக்கு அடியவன் என்பதைக் குறிப்பிட வைத்துக் கொண்டதாகும். பொன்னம்பலனாரின் இயற்பெயர் கனகசபை