பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாரதியாரும் பாவேந்தரும் பார்த்தவர்களை மலைக்க வைக்கும்படியான தோற்றம் பாவேந்தர் தோற்றம். அவர் குனிந்திருந்ததை யாரும் பார்த்திருக்க முடியாது. நின்றாலும் உட்கார்ந்திருந்தாலும் அவருடைய நெஞ்சும் தலையும் நிமிர்ந்தே இருக்கும். ஆனால் பாரதியைப் பற்றிப் பேசும்போது மட்டும் அவர் தோற்றத்தில் ஒர் ஒடுக்கமும், பேச்சில் ஓர் அடக்கமும் தோன்றியதை நான் கவனித்திருக்கிறேன். ஒருநாள் பாவேந்தரோடு நான் பேசிக்கொண்டிருந்த போது “பாரதியாருக்கும் உங்களுக்கும் இருந்த தொடர்பு பற்றிக் கூறுங்கள்” என்று கேட்டேன். உடனே பாவேந்தர், "பாரதியார் பற்றி நானே ஒரு நூல் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனவே பாரதியார் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதே. என்னைப் பற்றி மட்டும் கேள்." என்று கூறினார். அதற்குப் பிறகு பாரதியார் பற்றி அவரிடம் நான் எதுவும் கேட்கவில்லை. என்னோடும் மற்றவர்களோடும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவரே தற்செயலாகக் கூறிய சில செய்திகளை மட்டும் அவர் கூறியதுபோலவே கீழே தொகுத்து கொடுத்திருக்கிறேன். “பாரதியார் கி.பி.1908இல் புதுச்சேரி வந்தார். அவர் புதுச்சேரி வந்து ஓரிரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பாரதியாரோடு பழக்கம் ஏற்பட்ட நேரத்தில் நான் இருபது வயதுக்காளை சரியாகச் சொன்னால் முரட்டுக்காளை. நான் அரசியல் கழகம், சண்டைக் கழகம் (மற்களம்), புலவர் கழகம் ஆகிய எல்லாவிடத்திலும் இருப்பேன். என் தோற்றமே பார்ப்பதற்கு முரட்டுத்தனமாகத்தான் தெரியும். கையில் தங்கக் காப்பும் கழுத்தில் கருப்புக் கயிறும், மேனி தெரியும் மல் ஜிப்பாவுமாக எப்போதும் 'வஸ்தாது போல் திரிந்து கொண்டிருப்பேன். என் நடையுடை பாவனைகளில் ஒரு பண்பட்ட நிலை அப்போது ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மற்களத்தில் முறையாகப் பயிற்சி