பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பாரதியாரும்பாவேந்தரும் பாரதியாருக்குக் காட்டி, "யாரது? சுப்புரத்தனமா?’ என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார், "ஆமாம். சுப்புரத்தனந்தான். எல்லா செட்டிலேயும் இருப்பான்; ஆனால் பெரியபுலவன்' என்று விட்டுக் கொடுக்காமல் கூறினாராம். அதைக் கேட்ட பிறகு பாரதியாரின் மீது அளவுகடந்த மதிப்பு எனக்கு ஏற்பட்டு விட்டது. பாரதியார் பழைய கட்டுத் திட்டங்களையெல்லாம் உதறிவிட்டுப் பாமர மக்களுக்கும் புரியும்படி மிக எளிய முறையில் கவிதை எழுதியது புதுவையில் இருந்த பழம் புலவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் யாரும் பாரதியை மதிப்பது கிடையாது. பாரதியாரும் அவர்களைச் சட்டை செய்ய மாட்டார். எனக்குத் தமிழ் பயிற்றிய ஆசிரியர்களுள் ஒருவரான பங்காரு பத்தருக்குப் பாரதியாரைக் கட்டோடு பிடிக்காது. ஏன்? அவரைப் பாரதியாரின் எதிரி என்றே சொல்லலாம். எப்போது பார்த்தாலும் வருவோர் போவோரிடமெல்லாம் பாரதியாரின் பாட்டை எடுத்து வைத்துக் குறைசொல்லிக் கொண்டிருப்பார்; எதிர்பிரசாரம் செய்து கொண்டிருப்பார். "இவனெல்லாம் இங்கிலீஸ் படிச்சுப் புட்டுத் தமிழ்ப்பாட்டு எழுதறானுங்க. சுட்டுக்கு முன்னாலே வல்லெழுத்து மிகுங்கற சாதாரண இலக்கணமே தெரியல. அங்குக் கண்டான்னு எழுதறான். இவனெல்லாம் கவியாம்' என்று என்னைக் கூப்பிட்டுச் சொல்லித் திட்டுவார். நான் இதைப் பற்றிப் பாரதியாரிடம் சொன்னால் "அங்குக் கண்டான் என்று எழுதினால் நன்றாகவா இருக்கிறது?" என்று என்னைத் திருப்பிக் கேட்பார். 'நன்றாக இல்லாவிட்டால் என்ன? இலக்கணப் பிழையில்லாமல் நாம் எழுத வேண்டாமா?" என்று நான் கேட்பேன். பாரதியார் பதிலுக்கு ஒரு சிரிப்புச் சிரிப்பார். அவ்வளவுதான். நான் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நிறையக் கவிதை எழுதுவேன். பாரதியாரைச் சந்திப்பதற்கு முன்பாகவே நூற்றுக் கணக்கான தனிப்பாடல்களும், கீர்த்தனைகளும் பழைய பாணியில் எழுதி முடித்திருந்தேன். மயிலம் முருகன் மீது நிறைய பக்திப் பாடல்கள் எழுதியிருந்தேன். சுப்பிரமணியர் துதியமுது வெளியாகியிருந்த நேரத்தில் ஒருநாள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தேன். மயிலத்திலிருந்து ஒரு பக்தர் கூட்டம் உடம்பெல்லாம் திருநீறிலங்க சைவத்திருக்கோலத்தோடு என் வீட்டு வாசலுக்கு வந்து மிகவும் அடக்கமாக, “கவிஞர் கனக.சுப்புரத்தனம் வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டது. நான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுப் புகைச் சுருட்டைக் காலிலே போட்டு அனைத்துவிட்டு எழுந்து நின்று, "ஏன்? நான்தான்!” என்று சொன்னேன். வந்தவர்கள் அதிர்ச்சி