பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 អ៊ីដ្រាចាំ நின்றவை நான் சென்னையில் கல்லூரி மாணவனாக இருந்த ஆண்டு கி.பி. 1961-62. அப்போது பாவேந்தருக்கு 72ஆம் வயது நடந்து கொண்டிருந்தது. அந்த வயதிலும் அவர் நல்ல உடல் நலத்தோடு இருந்தார்; சுறுசுறுப்போடும் இயங்கிக் கொண்டிருந்தார். அவர் தோற்றம் பார்த்தவுடன் உள்ளத்தில் நிலைத்துவிடும் கம்பீரமான தோற்றம். அவர் உயரம் 5'10 இருக்கும். கொஞ்சம் முற்றிய மாந்தளிர் மேனி, உருண்டையான பெரிய முகம். மிரட்டும் பார்வை. அடியகன்ற அவருடைய பெரிய மூக்கின் மீது பழைய மோஸ்தர் வட்ட ஃப்ரேம் போட்ட கண்ணாடி எப்போதும் உட்கார்ந்திருக்கும். சிந்தனையாளர்களுக்கே உரிய பரந்த நெற்றி, நெற்றிமேடும் தலைமயிரும் சந்திக்குமிடத்தில் மட்டும் லேசான நரை. ஆனால் தலைமுடி அடர்த்தியாகவும் கறுப்பாகவும் இருந்தது. இளமையிலிருந்தே மற்களப் பயிற்சியால் திட்டமிட்டு உருவாக்கப் பட்ட கட்டுடம்பு அவர் புறங்கழுத்து பொலி காளையின் திமிலைப்போல் எடுப்பாக இருக்கும். சட்டையணியாமல் வெற்றுடம்போடு இருக்கும் நேரத்தில் கோதாவில் இறங்கத் தயாராய் இருக்கும் மல்யுத்த வீரனைப்போல் காட்சியளிப்பார். திரண்ட பலாப்பழ வயிற்றுக்குக் கீழே வேட்டியைத் தாழ இறக்கி விட்டுப் பிரம்பு பின்னிய சாய்வு நாற்காலியில் ஒய்வாகப் படுத்திருக்கும் அவர் தோற்றம், காண்போருக்குச் சென்னை அண்ணா மேம்பாலத்தை (Fly over) நினைவுபடுத்தும், வயதின் காரணமாக ஏற்படும் சுருக்கம் அவர் மேனியின் மீது இன்னும் கால் வைக்கவில்லை. பாவேந்தர் தோற்றத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவர் மீசை, பாவேந்தரின் மேலுதட்டுக்கும் மூக்கிற்கும் இடைப்பட்ட தூரம் ஒன்றரை அங்குலம் இருக்கும். எனவே அவர் மீசை மிகப்