பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/94 மட்டும் லேசான நரை. ஆனுல் தலைமுடி அடர்த்தியாகவும் கறுப்பாகவும் இருந்தது. இளமையிலிருந்தே மற்களப் பயிற்சியால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கட்டுடம்பு. அவர் புறங்கழுத்து பொலி காளையின் திமிலைப்போல் எடுப்பாக இருக்கும். சட்டை யணியாமல் வெற்றுடம்போடு இருக்கும் நேரத்தில் கோதாவில் இறங்கத் தயாராய் இருக்கும் மல்யுத்த வீர னைப்போல் காட்சியளிப்பார். திரண்ட பலாப்பழ வயிற் . றுக்குக் கீழே வேட்டியைத் தாழ இறக்கி விட்டுப் பிரம்பு பின்னிய சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்கும் அவர் தோற்றம், காண்போருக்குச் சென்னை அண்ணு மேம்பாலத்தை (Fly over) நினைவுபடுத்தும். வயதின் காரணமாக ஏற்படும் சுருக்கம் அவர் மேனியின் மீது இன் னும் கால்வைக்கவில்லை. பாவேந்தர் தோற்றத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டி யது அவர் மீசை. பாவேந்தரின் மேலுதட்டுக்கும் மூக்கிற் கும் இடைப்பட்ட தூரம் 1; அங்குலம் இருக்கும். எனவே அவர் மீசை மிகப் பெரிதாகவும், ஒரு கறுப்பு வெளவால் தன் இறக்கைகளை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது போலவும் இருக்கும். பாவேந்தர் மீசையின் மீது அதிக கவனம் செலுத்துபவர். சென்னையிலிருந்தபோது வயதின் காரணமாக அவர் மீசை உதிர்ந்து அடர்த்தி குறைந்து காணப்பட்டாலும், அதை ஒழுங்காக வெட்டிவிட்டுப் பேணிக் காத்து வந்தார். பாவேந்தரின் மகளுன கோபதி (மன்னர் மன்னன்) தந்தை யாரின் உருவ அமைப்பை அப்படியே ஏற்றுப் பிறந்திருக் கிருர் . ஆல்ை பாவேந்தருக்குப் பக்கத்தில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தினுல், ஒரு பீரங்கிக்குப் பக்கத்தில் துப்பாக்கியை நிறுத்தியதுபோல்தான் இருக்கும். பாவேந் தரின் பார்வையும், அங்க அசைவுகளும் அவருடைய மூத்த மகளான சரசுவதியிடத்தில் அப்படியே காணப்படு