பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/98 சொன்னது?" என்று அதட்டலோடு கேட்டார். ரெட்டி யார் முகவாட்டத்துடன் திரும்பிச் சென்று விட்டார். பாவேந்தர் குடியிருந்த பங்களா மேன் மாடியில் ஒரு தெலுங்குத் திரைப்பட டைரக்டர் குடியிருந்தார். பாவேந் தர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த பொன்னடியை அவர் ஏதோ ஒரு காரணத்திற்காகக் கூப்பிட்டுச் சற்றுக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தித் திட்டிவிட்டார். இதைக் கேட்ட பாவேந்தருக்கு வயதையும் மீறிய பெருஞ் சினம் வந்துவிட்டது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெளியிலே ஓடிவந்தார். மாடியிலே இருந்த தெலுங்கு டைரக்டரைக் கூவியழைத்து இறங்கி வாடா கீழே என்று போர்க் கோலத்தோடு நின்ருர். அவரைச் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்லப் பெரும் பாடாய்ப் போய்விட்டது. பாவேந்தர் சென்னையில் வாழ்ந்தபோது வெளியில் எங்கே சென்ருலும் வாடகைக் காரில் (taxi) தான் செல்வது வழக்கம். பாண்டிபஜாருக்குக் கீழே இ ரு க் கு ம் ராஜ குமாரி திரைப்படக் கொட்டகைக்குச் செல்வதாக இருந் தாலும் பொன்னடியைப் போய் வாடகைக்கார் கூட்டி வரும்படி சொல்லுவார். அப்போது குறைந்த மீட்டர் கட்டணம் எட்டணுதான். அதைக் கொடுத்துவிட்டு இறங்கிக் கொள்வார். தளர்ச்சியின் காரணமாக அவரால் அப்போது அதிகம் நடக்க முடியாது. எங்காவது நானும் அவரும் வெளியில் செல்லும்போது, நான் வாடகைக் காரைக் கூப்பிட்டால் 'வேண்டாம்; எதற்கு வீண் செலவு? ஆட்டோ ரிக்ஷாவில் போகலாம். அது நல்லா காற்ருேட் டமா இருக்கும்; ஜிகுஜிகுன்னு போகும்’ என்று குழந்தை போலக் கூறுவார். என் கைப்பணம் அதிகம் செலவாகக் கூடாது என்பதற்காக அவர் அவ்வாறு கூறுகிருர் என் பதை நான் அறிந்து கொள்வேன். பரவாயில்லை ஐயா! காரிலேயே போகலாம்’ என்று நான் வற்புறுத்திச் சொன்னபிறகு ஏறிக் கொள்வார். காரில் எப்போதும்