பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/99 முன் சீட்டில் காரோட்டிக்கும் பக்கத்தில் தனியாகவே உட் கார்ந்து கொள்வது வழக்கம். தவிர்க்க முடியாமல் எங்கா வது மாடிப்படியில் ஏற வேண்டுமானல் 'முருகு, இங்க வா!' என்று சொல்லித் தாங்கலாக என் தோள் மேல் கை போட்டுக் கொண்டு வருவார். பாவேந்தர் எப்போதும் தூய்மையாக இருப்பார். நாள்தோறும் மு. க த் ைத வழித்துக் கொண்டு பளிச்சென்று காட்சியளிப்பார். பாவேந்தரின் பொருளாதாரக் கொள்கை திட்டமில்லா தது. கையில் எவ்வளவு பணமிருக்கிறது, எவ்வளவு செலவு செய்ய வேண்டும், என்று அவர் சிந்திப்பதில்லை. நான் அவரோடு நெருங்கிப் பழகிய சில மாதப் பழக்கத்தி லிருந்து அவர் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன். அவர் பணத்தை ஒரு பொருட்டாக எப்போதும் மதித்ததில்லை. சென்னை யில் அவர் வாழ்ந்தபோது அவர் படுக்கை அறை எப் போதும் திறந்தே இருக்கும். அந்த அறையில், பாது காப்பாகப் பொருள்களை வைப்பதற்கு இரும்புப் பீசிேத வோ, பெட்டியோ கிடையாது பயணத்தின்பிோது பயன் படும் ஒரு தோல்பெட்டி (Leather suitcase) மட்டுமே இருக்கும். அதுவும் பூட்டப்படாமல் இருக்கும். ஒருநாள் எதற்காகவோ அதை நான் திறந்தபுேர்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. என்னய்யா! இவ்வளவு பணம் இதிலே இருக்கிறது' பூ, டாமல் வைத்திருக்கி றிரே?' என்று கட்டிலின் மீதமர்ந்திருந்த பிாவேந்தரைக் கேட்டேன். - "ஏ......ஏ...... பூட்டணும்; பார் எடுக்கரு' என்று அசிரத் தையாக விடையிறுத்தார். தேவ்ை ஏற்படும்போது தான் பணத்தைப் பற்றி நின்ப்பார்,மற்ற நேரங்களில் அதைச் சட்டை செய்ய மாட்டார். பேண மாட்டார். திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையும் சேமிக்கும் பழக்கமும் இவருக்கிருந்திருந்தால் பல லட்சம் அவர்