பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்|181 கொண்டிருந்த பட்டு என்னும் வேலைக்காரி தன் மகனுக் குத் திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். திடீ ரென்று ஒருநாள் அவள் அழுதுகொண்டு பாவேந்தரிடம் வந்தாள். பாவேந்தர் என்ன என்று விசாரித்தார். மகனு டைய திருமணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த பணத் தையும் வேறு சில பொருள்களையும் தன்னுடைய குடிசை யில் புகுந்து யாரோ திருடிக் கொண்டு போய்விட்டதாகச் சொல்லி அழுதாள். திருமணத்துக்கு முகூர்த்தம் வைத் தாயிற்று. உடனே பாவேந்தர் அவளிடத்தில் நூறு ரூபா யைக் கொடுத்ததோடு குறித்தபடி திருமணத்தை நடத்தத் தம் பங்களாவையும் ஒழித்துக் கொடுத்தார். படிக்காத அப் பட்டுவிற்குப் 'பாவேந்தர்' என்ற சொல் வாயில் நுழையாது. 'பாவேந்து கொடுத்துது! மகராசன்! நல்லா இருக்கணும்!” என்று கண்ணில் நீர் ததும்ப அடிக்கடி அவள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இவர் இரக்க குணத்தையும் தாராள நோக்கையும் பயன் படுத்திக் கொண்டு சிலபேர் இவரிடம் நிரந்தர விருந்தாளி களாகத் தங்கியிருப்பதுண்டு. அவர் சென்னையில் வாழ்ந்த போது வாட்டசாட்டமான ஓர் ஆள் அவரைத் தேடி வந் தார். உயரமான தோற்றமும், மூக்குக் கண்ணுடியோடும் எடுப்பான முகமும் கொண்ட அவர் பெரிய வாய்ச்சாலக் காரர். சரளமாக ஆங்கிலம் பேசவும் எழுதவும் வல்லவர். பாவேந்தர் கவிதைகளையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டுமென்றும், உலக அரங்கில் அவர் புக ழைப் பரப்ப வேண்டுமென்றும் சரமாரியாகப் பேசினர். தம்மை அனுமதித்தால் உடனிருந்து அப்பணிகளைச் செய்யத் தயார் என்றும் குறிப்பிட்டார். பாவேந்தர் யாரையும் எளிதில் நம்பிவிடும் பழக்கமுடையவர். மாற்றி அணிய வேறு உடைகூட இல்லாத நிலையில் வந்த அவ ரைப் பாவேந்தர் தம் இல்லத்தில் வைத்துக் கொண்டு உணவும் உடையும் கொடுத்துப் பல திங்கள்கள் ஆதரித்து வந்தார். எங்கு போனலும் அவரைத் தம்முடைய நேர்