பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/109 வெளியிட்டுக் கொண்டிருந்த குயில் 13-12-60 இதழில் பாரதிதாசன் பிக்சர்ஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியது. 20-12-60 இதழில் பாண்டியன் பரிசு' திரைப்பட விளம் பரம் வெளியாகியது. பாவேந்தர் புதுவையிலிருந்து தம் குடியிருப்பைச் சென்னைக்கு மாற்றிக் கொண்டார். கி.பி. 1961-62 ஆம் ஆண்டில் நான் மாணவனுகச் சென் னையில் இருந்தேன். பாவேந்தர்பால் எனது சென்னைத் தொடர்பு 1961 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்டது. பாவேந்தர் குடியிருந்த இராமன் தெரு பங்களாவை முதன்முதலாக நான் அடைந்தபோது என்னை வரவேற் றது 'பாரதிதாசன் பிக்சர்ஸ்' என்ற பெரிய விளம்பரப் பலகைதான். நான் சென்னையில் அவரோடு பழகிய நாட் களில் படம் பிடிப்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சி களைப் பற்றி நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆளுல் அம்முயற்சியைப்பற்றிய முழுமையான வரலாறு எனக்குத் தெரியாது. நான் அவரைச் சந்தித்தபோது தாம் மேற் கொண்டிருந்த படப்பிடிப்பு முயற்சியில் ஏமாற்றமும் சலிப்பும் கொண்டிருந்த பாவேந்தரைத்தான் பார்த்தேன். நான் அறிந்திருந்த குறைவான செய்திகளிலிருந்து, படம் பிடிப்பதற்காகப் புதுவை வீ ட் டி ன் மீது பெருந் தொகை கடன் வாங்கி வந்திருந்தாரென்றும், அத் தொகையை வீணுகச் செலவழித்து விட்டு உள்ள அமைதி யில்லாமல் வருந்திக் கொண்டிருந்தாரென்றும் தெரிந்து கொண்டேன். அ வ ரி. ரு ந் த உள்ள நிலையில் அதைப் பற்றிக் கேட்டால் வருந்துவார் என்று எண்ணி நான் எது வும் கேட்கவில்லை. அந்த நிலையிலும் படம் பிடிக்க வேண் டும் என்ற ஆசை அவர் உள்ளத்தை விட்டு நீங்கவில்லை. பாரதிதாசன் பிக்சர்ஸின் சார்பில் 'பாண்டியன் பரிசு’ படப்பிடிப்புத் துவக்க விழா ஆடம்பரமாக நடைபெற்றது என்றும், அன்றைய முதலமைச்சர் காமராசர் விழாவில் கலந்து கொண்டார் என்றும் கேள்விப் பட்டேன். நான் கூட பாவேந்தரோடு நடிகர் சிவாஜிகணேசன் இல்லத்