பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுகந்தரம்/113 பாவேந்தர் அதைக் கலைத்துவிட்டார். இதுதான் சாகும் போது பாவேந்தருக்கிருந்த கடவுட் கொள்கை. நான் கி.பி. 1962 ஏப்ரல் வாக்கில் என் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு சேலம் திரும்பி விட்டேன். நான் சேலம் திரும்பியதும், நின்று போயிருந்த குயில் இதழை மீண்டும் தொடங்கினுள் பாவேந்தர். நான் ஊருக்குப் புறப்படும் போது, "என்னுடைய பாடல்களை நீ ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து அனுப்பு: நான் குயிலில் வெளியிடு கிறேன்" என்று சொன்னர். "ஒரு சிறந்த கவிஞரின் கவிதையைக் கருத்துக்கெடாமல் வேற்றுமொழியில் மொழி பெயர்ப்பது என்பது மிகவும் சிக்கலான வேலை. உங்கள் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அளவுக்கு எனக்கு ஆங்கிலப் புலமை இல்லை" என்று சொன்னேன். 'பரவாயில்லை. தெரிந்த அளவு மொழி பெயர்ப்பு செய்' என்று கட்டளையிட்டார். நான் அழகின் சிரிப்'யில் உள்ள 'வானவில் பற்றிய பகுதி யையும், பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியில் உள்ள சுதந்தரம்' யாத்திரை போகும் போது' என்ற பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பி னேன். அப்பாடல்களைத் தொடர்ந்து குயிலில் வெளி யிட்டதோடு என் மொழி பெயர்ப்பைப் பாராட்டிக் கீழ்க் கண்ட சிறப்புக் கவி ஒன்றையும் எழுதி வெளியிட்டிருந் தார். - கான்செய் தமிழ்ப்பாட்டை நல்லதோர் ஆங்கிலத்தில் தான்செய் தளிக்கும் தகுதியிலே-வான்போன்குன் வாழ்கவே கன்முருகு சுந்தரங்தான் வண்மையெல்லாம் சூழ்கவே சீர்த்தி தொடர்ந்து. எந்தவித அறிவிப்புமின்றி 1-8-62 இதழோடு குயில் திடீரென்று நின்றுவிட்டது. பாவேந்தரின் பொருளாதார நெருக்கடிதான் காரணமென்று எண்ணுகிறேன். குயில் fகாண்க: பிற்சேர்க்கை.