பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/114 நின்றதும் பா வே ந் த ர் பாடலை மொழி பெயர்க்கும் வேலையை நானும் நிறுத்திக் கொண்டேன். இம்மொழி பெயர்ப்புப் பணியைக் குறிப்பிடும் போது, இது பற்றிய வேறுசிலசெய்திகளையும்.குறிப்பிடவிரும்புகிறேன். பாவேந் தர் பாடலை மொழிபெயர்க்கும் பணியில் பலர் தம்மை ஈடு படுத்திக் கொண்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருவாளர் பாலகிருஷ்ணன் அவர்கள். இவரைப் பற்றி தான் முதலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.t தமிழ்க் கவி தைகளை ஆங்கிலத்தில் .ெ மா ழி பெயர்ப்பதற்கென்றே பிறந்தவர். ஆங்கிலம் இவரிடத்தில் தாய்மொழி போல ஏவல் செய்யும். சுயமரியாதை இயக்கப்பற்றும் பாவேந் தர் பாடலில் அளவுகடந்த ஈடுபாடும் கொண்டிருந்த கார ணத்தால் உயிரும் உணர்வும் கெடாமல் கவிதை அழ கோடு இவரால் மொழிபெயர்க்க முடிந்தது. பாவேந்தரின் தனிப்பாடல்கள் சிலவற்றையும், எதிர்பாராத முத்தம் காப்பியத்தையும் இவர் மொழிபெயர்த்து முடித்திருந்தார். ஆளுல் அம்மொழிபெயர்ப்புகள் இன்னும் அச்சேருமல் இருப்பது வருந்தத்தக்கது. பாவேந்தரின் பாடல்கள் சிலவற்றைப் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையாரும் .ெ மா ழி .ெ ப ய ர் க் க முயற்சி எடுத்துக் கொண்டார் என்று தெரிகிறது. குடும்பவிளக் கின் முதற்பகுதியை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது 'கட்டில் அழகு" என்று தலைப்பிட்ட ஒரு பாடலை மொழிபெயர்க்க வேண்டி வந்தது. 'சரக்கொன்றை தொங்கலிட்ட பந்தலின் கீழ் தனிச்சிங்கக் கால்கான்கு தாங்கும் கட்டில் என்ற வரிகள் வந்ததும் பன்மொழிப் புலவருக்கு மலைப்பு வந்துவிட்டது. இதை எப்படி மொழிபெயர்ப்பது? என்று தெரியாமல் தடுமாறுகிறேன்' என்று பாவேந்தரிடம் குறிப் பிட்டாராம். 'கொன்றை என்பது தமிழ் நிலத்தில் முல் tகாண்க: பக்கம் 7