பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/119 பாவேந்தரின் அன்ருட வாழ்க்கை முறையையும் உணவு முறையையும் நான் பலநாள் நேரில் கண்டறிந்தவன். சேலத்தில் இருக்கும் வரை அவர் மனங்கோளுமல் நடந்து கொள்ள வேண்டுமே என்ற அச்சம் எனக்கு வந்து விட் டது. அவர் என்ன என்ன உண்பார் என்று பட்டியல் போட்டுக்கொண்டு அதன்படி என் மனைவியைச் சமைக்கச் சொன்னேன். அவரோடு நான் முதலிலே குறிப்பிட்டி ருந்த மெய்காப்பாளரும் காக்கி உடுப்போடு வந்திருந் தார். அவ்விருவரும் கூப்பிட்ட சொல்லுக்கு ஏனென்று கேட்க மாணவர் இருவரை அறையின் வாசலிலே நிற்க வைத்திருந்தேன். பாவேந்தர் விடுதிக்கு வந்ததும் காப்பி சாப்பிட்டு விட்டுப் பயணக் களைப்புத் தீர்வதற்காகக் கொஞ்ச நேரம் படுத்தி ருந்தார். மாலை 6 மணி இருக்கும். முருகு! நான், மருத் துவரிடம் செல்ல வேண்டும். மூச்சு இரைக்கிறது. இன் சொலின்' போட்டுக் கொள்ள வேண்டும்' என்று கூறிஞர். நான் அருகிலிருந்த டாக்டர் K.N. ராவிடம் அழைத்துச் சென்று ஊசிபோட ஏற்பாடு செய்தேன். மிகவும் களைப் பாகத் தென்பட்ட பாவேந்தர் ஊசி போட்டுக் கொண்ட தும் தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்பட்டார். பாவேந்தர் சேலம் வந்திருக்கிருர் என்ற செய்தி தெரிந்த தும் பல புலவர்களும் நண்பர்களும் அவரைத் தேடி வந்து விட்டனர். பேச்சு தமிழைப் பற்றியும் திருக்குறளைப் பற்றி யும் திரும்பியது. அப்போது அங்கு வந்திருந்த 'திருக் குறள் இராமசாமி என்ற புலவர் வள்ளுவர் புலால் மறுத்தலைப் பற்றி வற்புறுத்திக் கூறியிருக்கிருசே! அதைப் பற்றி உங்கள் கருத்து எள்?ை’ என்று பாவேந்தரைக் கேட்டார். இந்தக் கேள்வியை அவர் கேட்டுக் கொண்டி ருந்தபோது மீன் குழம்பும் புரு வறுவலும் அடங்கிய சாப் பாட்டுத் துக்கு என் வீட்டிலிருந்து வந்து சேர்ந்தது. பாவேந்தர் அப்புலவரை உற்றுப் பார்த்து வள்ளுவரின் புலால் மறுப்புக் கொள்கையை ஏற்றுக் .ெ கா ன் டா ல்