பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/120 தமிழன் உருப்படமாட்டான்; கோழையாகி விடுவான். வெறும் கத்தரிக்காயையும் வெண்டைக் காயையும் தின்று தின்று தமிழனுடைய வீரமே போ ச் சு. கோழி ஆடு இவற்றை அறுக்கணும். அவற்றிலிருந்து பீறிட்டடிக்கும் பச்சைரத்தத்தைச் சிறுவர்கள் பார்க்கணும். அப்பத்தா... அவுங்க அச்சம் நீங்கும்!" என்ருர், புலவர் அதிர்ச்சியால் வாயே திறக்கவில்லை. அடுத்தநாள் காலை 10 மணிக்குமேல் நாங்கள் கவிஞர் மாநாட்டுக்காக இராசிபுரம் புறப்பட்டோம். மாநாட்டுத் தலைவராகிய பாவேந்தர் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் விவேகானந்தநகர் ஏசு மாளிகையிலிருந்து மாநாடு நடைபெறவிருந்த அரங்க விலாசத் திரைப்படக் கொட்ட கைக்கு மேளதாளத்தோடு அழைத்துச் செல்லப்பட்டார். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாகத் திருவள்ளுவர் படத் திறப்புவிழா நடைபெற்றது. புலவர் குழந்தை திருவள் ளுவர் படத்தைத் திறந்து வைத்தார். மாநாட்டின் துவக்க வுரைப் பேச்சாளராக நாமக்கல் க வி ஞ ரி ன் பெயர் போடப்பட்டிருந்தது. ஆளுல், அவர் மாநாட்டுக்கு வர வில்லை. இம்மாநாட்டில் கரந்தைப் புலவர் ந. இராம நாதன், அரசினர் பயிற்சிக் கல்லூரியில் அப்போது பேரா சிரியராக இருந்த கு. சிவமணி, ஈரோடு புலவர் தமிழன் பன், பழனி இளங்கம்பன் ஆகியோரும் கலந்து கொண் டனர். பாவேந்தர் தலைமையில் நடைபெற்ற கவியரங் கில் நானும் பங்கேற்றேன். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திரு. சி. பா. ஆதித்தனர் வள்ளுவர் கண்ட தமிழகம் அன்றும் இன்றும் என்றும் என்ற தலைப்பில் சொற்பொழி வாற்றிஞர். மாநாட்டுக்குத் தலைமைதாங்கிய பாவேந்தர் உரை ஒரே உணர்ச்சிப் பிழம்பாகவும் ஆவேசமாகவும் இருந்தது. அந்த மாநாடு நடைபெறுவதற்குச் சற்று முன்தான் ‘தீக்குறளை சென்ருேதோம்' என்ற திருப்பாவை அடிக்குக் காஞ்சி சங்கராச்சாரியார் புதிய உரைசொல்லித் தமிழறிஞர்களின் ஏகோபித்த கண்டனத்துக்கு ஆளாகி