பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/122 காரணம். அப்பாடலைப் பாவேந்தரிடம் காட்டினேன். 'இது அந்தத் துரைமாணிக்கம் வேலை’ என்று மட்டும் சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்து விட்டார். 10 -11-63பிற்பகல் கவிஞர் .தமிழன்பைேடு பாவேந்தர் ஈரோடு புறப்பட்டுச் சென்று விட்டார். 11-11-63 திங் கட்கிழமை பிற்பகல் ஈரோடு மதரசா உயர்நிலைப் பள்ளி யில் பாவேந்தரின் சொற்பொழிவு நடைபெற்றது. அடுத்த நாள் பாவேந்தர் சேலம் வந்துவிட்டு அ ன் று இரவே சென்னை புறப்பட்டுச் சென்றுவிட்டார். இரண் டாம் முறை அவர் சேலம் வந்த போது நான் ஊரில் இல்லை. தவிர்க்க முடியாத ஒரு வேலையின் காரணமாக நான் திருச்செங்கோடு சென்று விட்டேன். அன்று பாவேந்தரை விடுதியில் சென்று சந்திக்க முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என் வருத்தத்தைத் தெரியப்படுத்தி அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். உடனே பாவேந்தர் அதற்குக் கீழ்க்கண்ட மறுமடல் விடுத்தார். 16—11—63 திரு. முருகு வாழ்க நாங்கள் அங்கு வந்தபோது எமக்குப் பேருதவி புரிந்தீர் கள். நன்றி. 13-11-63 ல் நீங்கள் எழுதிய அஞ்சல் கண்டேன். சேலம் ஓட்டலில் நீங்கள் சந்திக்க இயலாமை இயல்பு. யாம் அதுபற்றி வருந்தவில்லை. நன்றி மறவாத பாரதிதாசன் இராசிபுரத்தில் கவிஞர் மாநில மாநாடு நடைபெற்ற அதே ஆண்டு பாவேந்தர் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரிரண்டு நிகழ்ச்சிகள் சென்னையிலும் நடைபெற்றன. 29-4-63 இல் சென்னை அண்ணுமலை ம ன் ற த் தி ல் "பாவேந்தர் பாரதிதாசனர் 74-ஆவது பிறந்தநாள் விழா'