பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்|128 தது. அதற்குரிய பூர்வாங்க வேலைகளெல்லாம் கூட முற் றுப் பெற்று விட்டன. இப்பரிசு, வாழும் கவிஞர்களுக்கு வழங்கும் பரிசு. 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் இவர் இறந்ததும், இவருக்குக் கிடைக்கவிருந்த இப்பரிசு மலையாளக் கவிஞரான சங்கரகுருப்பிற்குக் கொடுக்கப் பட்டுவிட்டது. இது பாவேந்தருக்கு மட்டுமன்று; தமிழ்க் கவிதைத் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்ட பேரிழப் பாகும. பாவேந்தருக்கும் தமிழ்க்கவிதைக்கும் கிடைக்கவிருந்த பெருஞ்சிறப்புப் பறிபோனது பற்றி நான் மிகவும் வருத்தி னேன். இப்பரிசுக் குழுவிள் ஓர் உறுப்பினராக இருந்த திருவாளர் காரைக்குடி சா. கணேசன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இதுபற்றி விசாரித்தேன். அவர் அன்பு கூர்ந்து இதுபற்றிய விளக்கத்தை எனக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தினர்கள். அவர் கடிதத்தைக் கீழே கொடுத் திருக்கிறேன். Phope 600 & 396 கம்பன் அடிப்பொடி Kamban Manimandapam Kamban Adippodi ஓம். Karaikudi–623002 20–5–76 அன்புள்ள முருகுசுந்தரம் அவர்கட்கு வணக்கம்; உங்கள் 17.5-76 கடிதம். நன்றி. பாவேந்தர் வரலாற்றைத் தொகுத்தெழுதும் உங்கள் முயற் சியை வரவேற்கிறேன். முழு வெற்றிபெற வாழ்த்துகிறேன். பாரதீய ஞானபீடம் எவ்விதவேறுபாடுமின்றி இந்திய இலக் கியப் படைப்பிற்கு ஆண்டு தோறும் ஓரிலக்க ருபாய் பரிசு வழங்குவது காமெல்லாம் அறிந்ததே. 1964ல் பன்மொழிப் புலவர் தெ பொ. மீளுட்சிசுந்தரளுர், திரு. பெரியசாமித் தூரன் இவர்களுடன் யானும் சேர மூவர் குழு பரிந்துரை செ ய் ய நியமிக்கப் பெற்றது.