பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/7 முகப் படுத்தியது. எங்கள் பயிற்சிப் பள்ளியின் தலைமை யாசிரியராக இருந்த திரு. பாலகிருட்டிணன் பி. ஏ., எல். டி.ர் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை மிக்கவர். பாரதிதாசன் பாடல்களில் அதிக ஈடு பாடு கொண்டவர். பாரதிதாசன் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பூந்தோட்டம்’ என்ற பத் திரிகையில் வெளியிட்டவர். அவருடைய தொடர்பால் பாவேந்தர் பாடல்களின் மீது எனக்கு அளவிறந்த மதிப் பும் பற்றும் ஏற்பட்டன. பிறகு பாவேந்தரின் நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினேன். அவர் புதுவையிலிருந்து வெளியிட்ட 'குயில் கவிதை ஏடு பாவேந்தரின் படைப் புக்களைத் தொடர்ந்து செல்லும் ஆவலைத் தூண்டி விட் . أني -سة தமிழ் மறவர் பொன்னம்பலனர் பணிபுரிந்த அதே சேலம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கி.பி. 1955 ஆம் ஆண்டு தமிழாசிரியராக வேலை ஏற்றேன். அடுத்த ஆண்டு பள்ளி மாணவர்களைச் சுற்றுலாவுக்காக அழைத்துக் கொண்டு சென்ற பொழுது (திசம்பர் 1956) புதுச்சேரியும் சென்றி ருந்தேன். கையுறையாகச் சில கனிகளை வாங்கிக் கொண்டு மாணவர்களோடு பெருமாள் கோயில் தெருவில் இருந்த பாவேந்தர் இல்லத்துக்குச் சென்றேன். அன்று பாவேந்தர் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டுப் பிரம் புச் சாய்வு நாற்காலியில் ஒய்வாகப் படுத்திருந்தார். மாணவர் கூட்டத்தைப் பார்த்தவுடன் அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. எங்களைப் பற்றி விசாரித்துவிட்டு மாண வர்களை நோக்கி, 'தமிழை நன்ருகக் கற்க வேண்டும்' என்று அறிவுரை கூறினர். பிறகு விடை பெற்றுக் tஇவர் இளங்கண்னன்' என்ற புனைபெயரில் பத்திரிகைகளில் எழுதுவார். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், சாகித்திய அகாடமியில் ஆங்கில மொழிபெயர்ப்பாளராகச் சிலகாலம் பணி uslägmä. The Golden Anthology of Ancient Tamil Literature என்ற பெயரில் சங்கப் பாடல்களை மூன்று தொகுதிகளாக மொழி பெயர்த்திருக்கிருர்,