பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/136 புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின் துணைப்பாடு கருதும் தூயோன், திருமணச் சட்டத் தாற்பெறத் தக்க தீகில இருப்பினும் அதனை மேற்கோளல் இல்லை. அஃது திருமணம் அல்ல ஆதலால் -பெரியார்-மணியம்மை திருமணம் உண்மையான திரு மணம் ஆகாது என்பதற்கு இது பாவேந்தர் கொடுக்கும் விளக்கம். என்தின வறிந்து தன்செங் காந்தள் அரும்பு விரற்கிளி அலகு நகத்தால் கன்று சொறிவாள் என்று கருதி மணச்சட்டத்தால் மடக்க கினைப்பது திருந்திவரும் நாட்டுக்குத் தீயனடுத் துக்காட்டு! மங்கையர் உலகின் மதிப்புக்குச் சாவுமணி -இது அண்ணு-கைவல்யம் கருத்துப் போர். அதனைத் திராவிடர் உள்ளம் தீண்டவும் காணுமே!’ -இக்கடைசி வரி தந்தை பெரியார் மீது வீசிய எழுத்துச் சாட்டை. . ஒரே குறை: இப்பாடல் 1944 இல் எழுதப்பட்டது. இப்பாடலுக்கு உந்துதலாக இருந்தவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வர். வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் இவர், எனக்கு நண்பர். பாவேந்தருக்கு அ ன் ப ர். பாவேந்தரோடு நீண்டநாள் பழகியவர். பாவேந்தர் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவர். மிக வு ம் வசதியோடு வாழ்ந்த இப்பெரியவர், பாவேந்தருக்குப் பலவிதத்திலும் மனங்கோணுமல் உதவி புரிந்தவர். தமிழ்ப் புலமையும்

  • பக்கம் 64 பாரதிதாசன் கவிதைகள் 11