பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/137 இசைப்புலமையும் ஒரு ங் கே வாய்க்கப் பெற்றவர் பாவேந்தர் மிகவும் மதித்துப் போற்றிய நண்பர். இந்நண்பர் மிகவும் இளமையிலே தம் மனைவியை இழந்து விட்டார். மனைவியை இழந்தபோது இவருக்கு வயது இருபத்து மூன்று. மீண்டும் திருமணம் செய்து கொள்ள லாமா வேண்டாமா என்று உள்ளம் ஊசலாட இருந்த நிலையில் ஒரு பெண்ணிடம் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்பெண் படித்தவர்; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆளுல் வேற்றுச்சாதி. சீர்திருத்தவாதியான இவர் சாதி வேறுபாட்டைக் கருதாமல் மணக்க முன்வந்தார். இரு வரும் காதல் உணர்வோடு பழகியும், பெற்ருேருக்கஞ்சி அப்பெண் இவரை மணந்து கொள்ள மறுத்துவிட்டார். தமது காதலில் ஏற்பட்ட தோல்வியை இந்நண்பர் பாவேத் தரிடம் ஒருநாள் கூறினர். அன்று இரவே இது கவிதை யாக மலர்ந்துவிட்டது. இப்பாடலில் காதல் விருப்பும், பெற்ருேருக்கு அஞ்சும் அப்பெண்ணின் அச்சமும் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளன. திருவிருக்கும் அவளிடத்தில்! திறமி ருக்கும்! செங்காந்தள் விரல்நுனியின் ககத்தி லெல்லாம் மெருகிருக்கும். இதழோரப்,புன்சி ரிப்பில் விளக்கிருக்கும்! ள்ே:ன்பில் மலரி ருக்கும் புருவத்தில் ஒளியிருக்கும் வளைவி ருக்கும்! போய்ப்போய்கான் காத்திருக்கும் இடமும் மிக்க அருகிருக்கும்! வரமாட்டாள்; உடையும் நெஞ்சுக் ணைகோலும் எண்ணந்தான் அவளுக் கில்லை.; தமிழனுக்கு வீழ்ச்சியில்லை: இப்பாடல் எழுதப்பட்ட ஆண்டு 1955 என்று எண்ணுகி றேன். ஆசிரியர் சொக்கலிங்கம் தினசரி நாளிதழைச் சென்னையில் தொடங்கினர். அவ்விதழைத் தொடங்கிய

பக்கம் 43. காதல் கினைவுகள்