பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்|138 போது அதில் வெளியிடுவதற்காகப் பாவேந்தரிடம் ஒரு கவிதை கேட்டார். பாவேந்தர் கொடுக்க மறுத்தார். அப்போது உடன் இருந்த கெழுதகை நண்பரான நாமக் கல் மு. செல்லப்பரெட்டியார் துண்ட இக்கவிதையை எழுதித் தினசரிக்கு அனுப்பி வைத்தார். இதில் பெரியார் பணியும், திராவிட இயக்கத்தால் தமிழும் தமிழினமும் பெற்ற உயர்ச்சியும் சுட்டப்படுகின்றன. தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி தாழ்வதில்லை! தமிழ்நாடு தமிழ மக்கள், தமிழென்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே தமிழ்நாட்டில் எக்காளும் இருந்த தில்லை! தமிழர்க்குத் தொண்டுசெயும் தமிழ னுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்: தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ?t இரவின் இளவரசி: பாவேந்தர் சென்னை இராமன் தெருவில் கு டி யி ரு ந் த போது 18-2-62 வெள்ளிக்கிழமை இரவு 10 மணியள வில் இந்தப் பாடல் எழுதப்பட்டது. சிறுசிறு கருத்துக் களைக் கருவாகக் கொண்ட கட்டளைக் கலித் துறைகளை எளிமையாக எழுதி, அப்பாவினத்தைக் கவிஞர் நடுவே விளம்பரப் படுத்தப் போவதாகப் பாவேந்தர் குறிப்பிட் டதை நான் 14-2-62 நாட்குறிப்பில் எழுதியிருக் கிறேன். அவ்வாறு அவர் குறிப்பிட்ட பிறகு முதன் முத லாக எழுதி விளம்பரப் படுத்திய கட்டளைக் கலித்துறை இதுதான். பாவேந்தர் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு முற் றத்தில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் ர்பக்கம் 103; பாரதிதாசன் கவிதைகள் i