பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/142 இன்றமிழில் தேன்பிலிற்றி வண்ணங் கூட்டி இசைப்பாடல் பாடுகின்ற கவிதை வேந்தன் கன்னத்தில் மின்னல்விழச் சிரித்தான்; நெஞ்சக் கற்பனையைத் தட்டிவிட்டான்; என்னை நோக்கி "எண்னத்தில் உயர்ந்திருக்கும் சிறந்த ஆசான் எதிர்கிற்கும் மாணவர்கள் கவிழ்க்தி ருக்து மண்ணைத்தான் பார்ப்பார்கள்" என்று சொல்லி மறத்தமிழன் மெதுவாகப் புன்ன கைத்தான். "தித்திக்கும் முக்கனியைச் செழித்த கொய்யாத் தீங்கனியை வெறுத்தவெளவால் உமது வாயில் தித்திக்கும் கவிதையென்னும் கனியை யுண்ணச் சிறகைவிரித் தமர்ந்ததுவோ? சோலை தன்னில் தித்திக்கும் மலைத்தேனைத் தெவிட்டி வந்த தீங்குரலின் கருவண்டுக் கூட்டம் ஒன்று தித்திக்கும் இலக்கியத்தேன் பருகு தற்கும் திருவாயில் படிந்ததுவோ?" என்று கேட்டேன். அழகேறி ஆட்சிசெய்த மீசை தன்னை அன்போடு மெதுவாகத் தடவி விட்டுப் "பழகுதமிழ்ப் பெரும்புரட்சிப் பார திக்குப் பற்பலரால் இடையூறு கேர்ந்த போது கிளர்ந்தெழுந்த மீசையிது! தமிழ்ப்ப கைச்சொல் கேட்டவுடன் துடிப்பதிது!’ என்று சொல்லி மழைத்தமிழன் எழுந்துசென்ருன்; முழங்கு கின்ற மதயானை அவன்கடைக்குத் தோற்ற தங்கே. கொடிகட்டி உலகாண்ட ஆங்கி லேயர் குலத்துதித்த மறப்புலவன் ஷாவைத், தேனை வடிகட்டிக் கவிதையென ஆக்கித் தந்த வங்கத்துத் தாகூரைப், பனத்தி மிர்க்கு வெடிவைத்த தால்ஸ்தாவை எண்ணும் போது வெண்தாடி கம்கண்ணில் அசைந்து தோன்றும். படிமெச்சும் பாரதிக்குத் தாசன் தன்னைப் பைக்தமிழர் எண்ணுங்கால் மீசை தோன்றும்.