பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/148 6 திரைப்படத்தில் மகாகவி பாரதி (125ம் பக்க அடிக்குறிப்பிற்குரியது) தமிழ்ச் சான்ருேர்களே, உலகு தொடங்கிய நாள் முதல் மேம்பட்டு வந்த நம் தமிழ் மொழி -புலவர்களாலும், புரவலர்களாலும் வளர்ந்து வந்த நம் தமிழ்மொழி, பத்தொன்பதாம் நூற்ருண்டை அடைந்தபோது அந்தத் தண்டமிழ் உண்டா இல்லையா எனற நிலையை அடைந் திருந்தது. அந் நிலையில், யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணுேம் என்று எழுந்த மகாகவி பாரதி- அவர் சொன் னது போல இனிக்க எழுதிப் பாடிக் குவித்துத் தமிழுக்கோர் ஒளியை- தமி முக்கோர் எழுச்சியை, உண்டு பண்ணினர். தம் வறுமையிலும் இவ்வரிய தொண்டு பண்ணினர். இக்காள் அவர் இளைஞர், முதியர், கல்விச் செல்வர், பொருட் செல்வர் அனைவர் உள்ளத்துள்ளும் வாழ்கின்ருர் எனின் அது விழப்பன்று.