பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்115 'ஆமா! நீ புலால் சாப்பிடுவயா?" என்று கேட்டார். சாப்பிடுவேன்' என்றேன் நான். 'கறியை விடாதே. கறிதான் மனிதனுக்கு உணர்ச்சி வெறியை உண்டாக்குது. உணர்ச்சி வெறிதான் கவிஞ னுக்கு வேண்டும். கடைசிவரையிலும் கறியை விடக் கூடாது. நான் அதுக்கு எடுத்துக் காட்டு... என்ன?” என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தார். 'சரிங்க ஐயா!' என்றேன். 'சைவத்தை நம்பி நம்ம வீர உணர்ச்சியே போயிடுச்சு. பழைய காலத்திலே ஏறு தழுவிளுேம்! இப்ப எவன் தழு வரு? கன்னுக்குட்டியைக் கண்டாலே காதவழி ஒடரு...' என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார். தாயாரம்மாள் எதிரில் வந்து நின்ருர், ‘ என்ன சாப்பாடு இருக்கா? 'இருக்குதுங்க." 'மத்தியானம் செஞ்சதெல்லாம்...?” 'அதெல்லாம் இல்லீங்க...' 'இருல் கூட இல்லையா?” 'கொஞ்சம் இருக்குதுங்க." "சரி. போடு போடு!' தாயாரம்மாள் சாப்பாடு பரிமாறினர். நான் கீழே அமர்ந்து சாப்பிட்டேன். பாவேந்தர் அருகில் இருந்த சாய்வு நாற் காலியில் அமர்ந்த வண்ணம், நல்லா சாப்பிடு. வெட்கப் படாதே...... ஆமா! நீயேன் விடுதியிலே சாப்பிட்ற? இங் கேயே வந்திடே. தினம் இங்கேயே சாப்பிடலாம்' என் ரூர். -