பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/23 கருப்புக்கார் ஒன்று பாவேந்தர் வீட்டுக்குப் படகுபோல் வந்து நின்றது. பெருமிதமான தோற்றமுடைய ஒருவர் அதிலிருந்து இறங்கி உள்ளே வந்தார். பாவேந்தர் அவரை அன்போடு வரவேற்ருள்.இருவரும் மகிழ்ச்சியோடு அரைமணிநேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் விருந்துண்ணத் தொடங்கினர். மிகவுயர்ந்த புலால் உணவும், வெளிநாட்டு விஸ்கியும் விருத்தில் இடம் பெற்றன. அவர்கள் இருவரும் விருந்தை முடிக்கும் போது மணி 9.30. அதற்குமேல் பொன்னடியும் நானும் சாப்பிட உட்கார்ந்தோம். நான் பொன்னடியைப் பார்த்து "யாரிந்தச் சிறப்பு விருந்தினர்?' என்று கேட்டேன். 'அவர் வருமான வரித்துறையில் பெரிய அதிகாரி' என் ருர் பொன்னடி. "இவர் அடிக்கடி வருவாரா?' என்று கேட்டேன். '"ஆமாம்! இன்னும் பல பெரிய அதிகாரிகளும் வருவர்" என்ருர் பொன்னடி, ‘விருந்துச் செலவு யாருடையது!" என்று கேட்டேன். 'எல்லாம் பாவேந்தருடையதுதான். இது .ெ ப. ரி ய இடத்துச் சமாச்சாரம். நமக்கெதற்கு? இதோடு விட்டு விடுவோம்' என்ருர் பொன்னடி. அதன் பிறகு நாங்கள் இருவரும் அதைப்பற்றிப் பேசுவதில்லை. சாப்பிட்டு முடிந்ததும் நானும் பொன்னடியும் விருந்து சாப்பிட்ட மேசை நாற்காலிகளை ஒழுங்கு செய்து ஓரிடத் தில் எடுத்துப் போட்டுவிட்டுப் படுக்கப் போனுேம். பாவேந்தரும் அந்த அதிகாரியும் இரவு 10 மணிவரை பேசிக்கொண்டு இருந்தார்கள். அதற்குமேல் அந்த அதி காரி விடைபெற்றுக் கொண்டு சென்ருர். பாவேந்தர் படுக்கையில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். சமையற்காரத் தாயாரம்மாள் வீட்டு வேலைகளை மூடித்து விட்டு நடுக்கூடத்தில் வழக்கம் போல் படுத்துக்கொண்