பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/32 உடனே 'நீ சும்மா இரு உனக்கென்ன?' என்று கூறி அடக்கிவிடுவார். கவிஞர் தஞ்சைவாணன் சென்ற பிறகு நானும் பாவேந்த ரும் சாப்பிட அமர்ந்தோம். மீன் குழம்பும் உப்புக் கண்ட மும் இலையில் பரிமாறப்பட்டன. நாள்தோறும் மீன் இல் லாமல் பெரும்பாலும் சாப்பிடமாட்டார். புதுச்சேரி கடற் கரை நகராகையால் மிகவும் மீன் மலிவாகக் கிடைக்கும். புதுவை வாசியான பாவேந்தருக்கு மீன் அன்ருட உண வாகிவிட்டது. மீனின் சினையை விரும்பிச் சாப்பிடுவார். இலையில் பொரித்து வைக்கப்பட்டிருந்த மீன் சினை என்ன வென்றே எனக்குப் புரியவில்லை. நான் தடுமாறுவதைப் பார்த்த பாவேந்தர், 'என்ன விழிக்கிற? மீைேட சினை. ரொம்ப நல்லா இருக்கும். சாப்பிடு' என்ருர். நானும் சாப்பிட்டேன். - இலையில் பரிமாறப்பட்டிருந்த உப்புக் கண்டத்தைக் காட்டி, 'இது என்ன உப்புக் கண்டம்? சொல்லு பார்க்க லாம்' என்று கேட்டார். அதைச் சுவைத்துப் பார்த்தபோது அது ஆட்டுக் கறியா கத் தெரியவில்லை. சுவை மாறுபட்டிருந்ததால் மான் கறியாக இருக்கும் என்று நினைத்து, 'மான் கறியா?’’ என்றேன். உடனே பாவேந்தர் 'இல்லை. புலிக் கறி!' என்ருர், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. 'என்ன? புலியா? புலிக்கறி எப்படிக் கிடைத்தது?’ என் றேன் நான். - "புதுக்கோட்டை அரசருக்கு வேண்டிய ஒரு நடிக நண்பர் எனக்கு அடிக்கடி அனுப்புவார். சாப்பிடு! புலிக்கறி சாப் பிட்டால் வீரம் மிகும்' என்ருர். வேறு வழி? சாப்பிடாமல் இலையை விட்டு எழ முடியுமா? பேசாமல் எப்படியோ சாப் பிட்டுத் தீர்த்தேன்.