பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/33 口 4–2–62 ஞாயிறு 口 3.2-62 சனிக்கிழமை இரவு மந்தை வெளியில் த.தே.க. கூட்டம். சம்பத்தும் கவிஞர் கண்ணதாசனும்பேசினர்கள். நானும் தஞ்சை வாணனும் கவிஞர் சுரதாவோடு கூட் டத்துக்குச் சென்றிருந்தோம். கூட்டம் முடிய இரவு நெடு நேரம் ஆகிவிட்டது. நான் நண்பர் திரு. மயிலைநாதன் வீட்டில் படுத்துக்கொண்டேன். காலையில் எழுந்ததும் சுரதா வீட்டுக்குச் சென்றேன். அன்று நடுப்பகல் அவர் வீட்டில் எனக்கும் மயிலைநாதனுக்கும் விருந்து. அன்று மாலை 7 மணியளவில் பாவேந்தரைக் காணப்புறப் பட்டேன். பாவேந்தர் இரா உணவை முடித்துக்கொண்டு அப்போதுதான் வந்தமர்ந்தார். அன்று அவரே விரும்பித் தம் இளமைக்கால நிகழ்ச்சிகளைப் பொறுமையோடு சொன் ஞர். அவர் சொன்னதை நான் அப்படியே கீழே கொடுத் திருக்கிறேன்: 'என் தந்தை கனகசபை புதுச்சேரியில் கப்பல் வாணிபம் செய்தவர்; மளிகைமண்டி வைத்திருந்தார். மணிலா, வெங்காயம், வெற்றிலை, கோழிமுட்டை, புட்டியில் அடைத்த மிளகுரசம் முதலியவற்றைக் கப்பலில் பிரான்சு முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார். ஒரு முறை இவருடைய சரக்கை ஏற்றிச்சென்ற கப்பல் கவிழ்த் ததால் எங்கள் குடும்பமே கவிழ்ந்தது. அப்போது என் தந்தைக்கு வயது எழுபது. பல இலட்சம் வாணிபத்தில் இழப்பு. இப்போது இருக்கும் புதுச்சேரி வீடு நான் தலை யெடுத்துவாங்கியது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த