பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/39 திரவியில் எங்கள் பள்ளியின் எதிரில் இருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் விசுவலிங்கம்பிள்ளை என்பவர். அவர் ஊரில் பெரிய மனிதர். அவர் வீட்டுக் குறட்டில் பலகை அடித்திருக்கும். அதுதான் அவ்வூரின் சங்கப்பலகை. விசு வலிங்கம்பிள்ளை மாலை நேரத்தில் யாரையாவது நான்கு பேரைக் கூட்டிவைத்துக் கொண்டு தப்புந்தவறுமாக திரு விளையாடற் புராணம் சொல்லுவார். விசுவலிங்கம் பிள்ளையின் ஆசிரியர் இராமசாமிப்புலவர் என்பவர். இப்புலவருக்கு வயது 70 இருக்கும். ஒரு நாள் மாலை நான் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது குருவும் சீடரும் குறட்டுப் பலகை யில் அமர்ந்து இலக்கியச் சர்ச்சை செய்து கொண்டிருந்த னர். இன்னும் சிலரும் உடனிருந்தனர். விசுவலிங்கம் பிள்ளை என்னைப் புலவருக்குக் காட்டி 'இந்தப் பையன் தான் இங்கே தமிழ் வாத்தியார்’ என்று சொன்னர். புல வர் என்னைக் கூப்பிட்டார். அவர் என்னேக் கூப்பிட்ட தோரணையே. எனக்குச் சுர்ரென்று கோபம் வரும்படி செய்தது. இருந்தாலும் அவருடைய முதுமைத் தோற் றத்துக்கு மதிப்புக் கொடுத்து அடக்கமாகக் குறட்டின் மேல் அமர்ந்தேன். புலவர் இலையடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு முலசுரக்த அன்னையோ முன்னின்-கிலைவிளம்பக் கொங்கை சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா இங்குயர்ந்தாள் ஆர்சொல் எனக்கு? என்ற நால்வர் நான்மணி மாலைப் பாட லை ப் பாடிப் "பொருள் தெரியுமா? என்று கேட்டார்." 'பொருள் தெரியும்' என்று நான் சொன்னேன். 'ஞானசம்பந்தருக்கு அன்னையர்களாக இப்பாடலில் இரு வர் குறிப்பிடப்படுகின்றனர். ஒருவர் உமாதேவியார்; மற்ருெருவர் பாண்டிமாதேவியான மங்கையற்கரசியார்.