பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/40 இந்த இருவருள் எவர் சிறந்த அன்னை?' என்று என்னை அடுத்த கேள்வி கேட்டார் புலவர். 'மங்கையர்க்கரசிதான்' என்று நான் அழுத்தந் திருத்த மாக விடை கூறினேன். "எப்படி?’ என்ருர் புலவர். 'குழந்தை பசியால் அழுமுன்பே 'பால் நினைந்துட்டும் தாய் தலையன்புடையவள். குழந்தை அழுவதைக் காதால் கேட்டவுடன் முலைசுரந்து ஊட்டுபவள் இடையன் புடை யவள். குழந்தை பசியால் அழுவதைக் கண்ணுல் கண்ட பிறகு பாலூட்டுபவள் க ைட ய ன் பி ன ள்." சம்பந்தக் குழந்தை பொய்கைக் கரையிலே பாலுக்காக ஏங்கியழுத தைக் கண்ணுல் கண்ட பிறகும் உமாதேவி பாலூட்ட வில்லை. இறைவன் உணர்த்திய பிறகே ஊட்டினுள். இவளை எவ்வாறு தாயென்று சொல்லமுடியும்? ஆளுல் மங்கையர்க்கரசியின் நிலைவேறு. சீகாழியில் சம்பந்தக் குழந்தை பாலுக்காக அழுதது என்று இறந்த கால நிகழ்ச்சியை எதிரில் நின்றவர்கள் எடுத்துரைத்த கணமே பாண்டிமாதேவியின் மார்பகங்கள் விம்மிப் பரந்து பாலைப் பொழிந்தன. இத்தாய்மைச் சிறப்பு உமாதேவியிடம் இல்லை. மேலும் உமாதேவி இப்பாடலில் 'முலசுரந்த அன்னை' என்று சாதாரணமாகக் குறிப்பிடப்படுகிருள். ஆனல் மங்கை யர்க்கரசியோ கொங்கை சுரந்த அருட்கோமகள்' என்று குறிப்பிடப் படுகிருள். அருள்' என்னும் அடைமொழியே, அவ்ஸ் சிறந்த அன்னை என்பதைக் காட்டும்' என்று விள்க்கமாக நான் விடையிறுத்தேன். என் விளக்கத்தை அவர் உள்ளம் ஏற்றுக் கொண்டது என் பத்ை அவர் முகம் காட்டியது. இருந்தாலும் மற்றவர் முன்னிலையில் என்னை மட்டந்தட்ட வேண்டும் என்ற ஒரே