பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/43 'அப்படியா...சொல்ற' என்று சொல்லி எழுந்து கால் மேல் கால்போட்டு உட்கார்ந்தார். பிறகு தம் ஆள்காட்டி விரலை மூக்கு துணியில் சிறிது நேரம் வைத்திருந்தார். பிறகு கூறத் தொடங்கினர்: 'எனக்கு இளமையிலிருந்தே அரசியலிலே ஈடுபாடு அதி கம். காரணம் பாரதியார் தொடர்புதான். யாராயிருந்தா லும், அவனுக்கென்று ஓர் அரசியல் கொள்கை வேண் டும்; அதிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நான் அப்படித்தான் இருந்து வருகிறேன். என்னுல் அரசியல் இல்லாமல் இருக்க முடியாது. என்னு டைய அரசியல் ஈடுபாட்டினுலே எனக்கு இளமையி லிருந்தே அடிக்கடி தொல்லை வருவதுண்டு. ஒரிடத்திலே என்னை நிலையாக வைக்காமல் அடிக்கடி வேண்டுமென்றே மாற்றிக் கொண்டிருப்பார்கள். புதுவை அரசியலில் நான் எந்தக் கட்சியில் இருந்தாலும் அது வெற்றிபெறும். கெப்ளே என்பவன் ஆளுங் கட்சித் தலைவன். அவளுேடு குட்டியா சபாபதிப் பிள்ளை என்ற பெரிய வழக்கறிஞர் ஒரு முறை தேர்தலிலே போட்டியிட் டார். இந்தப் போட்டியில் நான் பிள்ளை பக்கம் இருந் தேன். பிள்ளை வெற்றிபெற்ருர். தேர்தல் முடிந்து ஒரு திங்கள் ஆனதும் என்மீது கெப்ளேயின் ஆட்க்ள் பொய் வழக்குப்i போட்டு ஒரு மாதம் மூன்று நாள் சிறையிலே தள்ளிவிட்டார்கள். திருபுவனை வட்டாரத்தில் எனக்குச் செல்வாக்கு அதிகம். அங்கு வாத்தியார் சொன்னுல் சொன்னதுதான். அந்த வட்டாரத்தில் மொத்த ஒட்டு 50.15. நான்கு தேர்தல் t இப்பொய் வழக்குச் செய்தியைப் பற்றிப் பாவேந்தர் தம்முடைய குடும்ப விளக்கு- இரண்டாம் பகுதியில் குறிப்பிடுகிருர், ஐயா யிரமக்கட்(கு) ஆம்உரிமை காக்ககான் பொய்யர் தமையெதிர்த்த போதென்னைப்-பொய்வழக்கால் சேர்த்த சிறையெனக்கோ தென்றல்வரும் சோலையன்ருே?