பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுகந்தரம்/49 வழங்கினர். இம்மன்றத்துக்கு வசூலான மொத்த நன் கொடை ரூ. 425. இதில் பெரிய தொகையாக நன் கொடை போட்ட பிரமுகர் பணம் கொடாமல் சில மாதங் கள் இழுக்கடித்தார். கவிஞர் பொறுமையிழந்தார். நேராக அப்பிரமுகர் இல்லத்துக்கு ஒரு நண்பரோடு சென் ருச். வரவேற்பு அறையில் போய் அமர்ந்து கொண்டு "அவ என்ன நன்கொடைப் பணம் கொடுக்கருளு இல்லை யான்னு கேளு' என்று ஒரு சத்தம் போட்டார். பிரமுகர் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்ததோடு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். பீரோ செய்யப் பலகை எடுத்துக் கொண்டு விடு திரும்பி யதும் கவிஞரும் நானும் சாப்பிட்டோம்; பிறகு ஒய்வாக வெளியில் வந்து உட்கார்ந்தோம். எங்கள் பேச்சு தமி ழைப் பற்றியும் தமிழ் அறிஞர்களைப் பற்றியும் திரும்பி யது. பாவாணர் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் திரா விட மொழியாராய்ச்சித் துறையில் பணியாற்றியபோது அவருக்குப் பெரிதும் தொல்லை கொடுத்துவந்த ஒரு தமிழ்ப் பேராசிரியரைப் பற்றிப் பேச்சு வந்தது. உடனே அவரைப் பற்றி மிகவும் கடுமையான சொற்களால் பேசத் தொடங்கி விட்டார். . - ‘இவர் ஒரு தமிழ்த் துரோகி. ஒரு பெரிய இடத்துத் திரு மனத்துக்குப் போயிருந்தபோது இவரும் வந்திருந்தார். விருந்தின்போது என்னையும் சாப்பிடும்படி திருமண வீட் டார் வற்புறுத்தினர். என் உடம்பில் தித்திப்பு நீர் (Sugar) இருப்பதால் நான் விருந்துண்ண மறுத்தேன். பேருக்காவது விருத்தில் உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டு விட்டு எழச் சொன்னர்கள். நானும் கொஞ்சம் சாப் பிட்டுவிட்டு நடுவில் எழுந்தேன். உடனே இவர் என்ன செய்தார் தெரியுமா? எனக்கு முன் எழுந்து ஓடிச்சென்று கையலம்பிக் கொண்டு, எனக்குச் செம்பில் தண்ணீர் மொண்டு கொடுத்தார்; ஒரு செம்பு தண்ணீரை என்