பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/51 “காந்தியடிகள் 'விதேசித் துணியெரிப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருத்த நேரம். இப்போராட்டம் மறை மலையாருக்குச் சிறுபிள்ளைத் தனமாகப்பட்டது. வெளி நாட்டுத் துணிகளைக் கடற்கரையில் போட்டுக் கொளுத்து வதைக் கண்டஞ்சி ஆங்கிலப் பேரரசு இந்தியாவை விட்டு ஓடிவிடும் என்று நினைப்பது முட்டாள்தனம் என்று பத்திரி கையில் எழுதினர். அப்போது சென்னை மாநில முதல மைச்சராக இராஜகோபாலாச்சாரியார் இருந்தார். அவர் இவரை மறைமலையாரிடம் அனுப்பி மாதம் ரூ. 500/- சம் பளத்தில் நல்ல வேலை கொடுப்பதாகவும், காங்கிரசைத் தாக்கி எதுவும் எழுதவேண்டாமென்றும் கேட்டுக் கொண் டார். மறைமலையார் இவரை நோக்கி, "போபோ ! இது மாதிரி வேலைக்கு இனிமே வராதே" என்று கூறி அனுப்பி விட்டார். மறைமலையாருக்கு வடமொழியும். தமிழும், ஆங்கிலமும் கூடிய செறிந்த புலமை வாய்த்திருந்தது. அத்தகைய புலமை பெற்ருேர் அவருக்குப் பிறகு யாரும் தோன்ற வில்லை. அவரிடமிருந்த குறை, சைவத்தை நிலைநாட் டவே தம் வாழ்வைச் செலவிட்டதுதான்." [T] அதன்பிறகு இலக்கியப் பரிசுகளைப் பற்றி எங்கள் பேச்சுத் திரும்பியது. 'ஆண்டுதோறும் ரூ. 5000/-வட்டி வரும் படி நிலையான ஒரு தொகையைச் சேர்த்து, ஒரு பரிசுத் திட்டத்தை நிறுவ வேண்டும். அதற்குப் 'பாரதிதாசன் பரிசு' என்று பெயர் வைக்கவேண்டும். அந்த ஐயாயிரம் ரூபாயையும் ஆண்டுதோறும் வெளியாகும் நல்ல ஒரு தமிழ்க் கவிதை நூலுக்குப் பரிசாக வழங்க வேண்டும்” என்று நான் சொன்னேன். "ஆமாம்! ஆல்ை இதை இந்த நாட்டு மக்கள் அல்லவா செய்யவேண்டும்?' என்று கூறினர் பாவேந்தர். -