பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/53 அந்த இடத்தில் பாவேந்தருக்காக மற்றவரிடத்தில் கை நீட்டிக் காசு வாங்க நேரிட்டு விட்டதே என்று திகைத் தேன். "எதற்கும் உங்கள் சட்டைப் பையைத் தேடிப் பாருங்கன்’ என்று அவரிடம் சொன்னேன். தேடிப் பார்த் தார். என்ன வியப்பு: சரியாகப் பத்துக்காசு அவர் சட்டைப் பையில் இருந்தது. அப்பாடா! அந்தக் காசை வாங்கிக் க ைட க் கா ர ன் கையில் அறுபது காசையும் கொடுத்துவிட்டேன். உள்ளே படம் ஒடிக் கொண்டிருந்தது. நடுதடுவே கதை யின் நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்தார். "கதாநாயகன் காதலியிடம் புகைப்படத்தைக் கொடுக்க மறுக்கிருன். @g, Immoral orogi. 'முத்தான முத்தல்லவோ என்ற பாட்டு திரையில் பாடப் பட்டபோது இது பாட்டாம்! என்று கூறிவிட்டுச் சிரித் தார். படம் முடிந்து வெளியில் வந்தோம். வெளியில் நின்று கொண்டிருந்த ஒரு டாக்சி டிரைவரைப் பார்த்து, 'ஏப்பா! தி.நகர் வர்ரியா?' என்று கேட்டார். "இல்லையுங்க. டவுனுக்குப் போற' என்று அவன் சொன்ஞன். 'டவுனுக்குப் போறவ இங்க ஏ நிறுத்திக்கிட்ட போற தானே?... முருகு... இவ டாக்சி நம்பரைக் குறிச்சுக்க' என்று சொல்லி அவனிடம் சண்டைக்குப் போய்விட்டார். கவிஞரைச் சமாதானப் படுத்தி வேறு ஒரு டாக்சியில் ஏறி இருவரும் வீடுவந்து சேர்ந்தோம்.