பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/58 றுள்ள பிழைச் சொற்களைப் படித்தவர்களே எழுதுவ தென்ருல், இராசகோபாலாச்சாரிக்கும் இவர்கட்கும் என்ன வேறுபாடு? - 'எம்' என்பது பன்மைச் சொல். அதளுேடு பன்மைக் குரியதம்' என்பதுதான்சேரும்.எனவே எந்தம் என்று எழுத வேண்டும். உந்தம் என்பதும் அப்படியே. ' என்’ என்பதும் 'உன்' என்பதும் ஒருமைக்குரியவை. இவற்ருேடு ஒருமைக்குரிய தன் சேரவேண்டும். எனவே என்றன் உன்றன்' என எழுதவேண்டும். 口 11–3–62 ஞாயிறு D புலியும் மானும் ஒரே நீர்த்துறையில் தண்ணிர் குடித்த தாகச் சில புராண வரலாறுகள் கூதுவதுண்டு. அத் தகைய ஒரு நிகழ்ச்சி இலக்கிய மேடையில் ஒரு முறை நடைபெற்றது; வடஆர்க்காடு மாவட்டத் தலைநகரான வேலூரில் நடைபெற்றது. பரம நாத்திகரான பாவேந் தர் தலைமையில் பழுத்த ஆத்திகரான கிருபானந்தவாரி யார் பேசினர். இந்நிகழ்ச்சி பற்றி இன்று பாவேந்தரிடம் கேட்டேன். 'கொள்கையில் இருதுருவங்களாக விளங் கிய நீங்கள் ஒரே மேடையில் பேச எவ்வாறு ஒப்புக் கொண்டீர்கள். கருத்து மோதல் ஏற்படவில்லையா?" என்று கேட்டேன். 'இல்லை. இரண்டு துருவங்களையும் தமிழ் என்னும் பொதுக் கொள்கை ஒன்று படுத்திவிட்டது.அவர்தமிழைப் பற்றி எவ்வளவு சிறப்பாகப் பேச வேண்டுமோ அவ்வளவு