பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/61 புருக்கி இளமையிலும், மஞ்சட் காமாலை முதுமையிலும் வந்தால் அவற்றில் இருந்து தப்பிப் பிழைப்பது கடினம். முதுமையில் தாக்கிய என்புருக்கி இவரை ஒன்றும் செய்ய வில்லை. அந்நோய் இவருக்குத் துவக்க நிலையிலும் இருந்திருக்கலாம். புதுச்சேரியில் பிரெஞ்சு அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்கு மருத்துவமெல்லாம் இல வசம். அரசாங்க மருத்துவமனையில் ஓர் அரசாங்க அலு வலர் சேர்க்கப்பட்டால் (அவர் ஒய்வு பெற்றவரானுலும் சரி.) அவர் நோய் தீரும் வரையில் சம்பளத்தில் அல்லது ஓய்வூதியத்தில் 1/3 பங்குபிடித்துக் கொள்வார்கள். ஆனல் மருத்துவமனையில் நோயாளிக்குச் செலவிடும் தொகை அவர்கள் பிடித்துக் கொள்ளும் தொகையைப் போல் பத்து மடங்கு இருக்குமாம். என்புருக்கி நோயில்ை தாக்கப்பட்ட போது பாவேந்தரும் புதுவை அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு நாள்தோறும் மருத்துவமனையில் கொடுக்கப் பட்ட முட்டைகளையும் பழங்களையும் தின்னமுடியாமல் வீட்டுக்குக் கொடுத்து அனுப்புவாராம். உடல் நலம் தேறி வீடு திரும்பியதும், ஒராண்டு ஒரு பிரெஞ்சுச் சமை யல்காரன் இவருக்கு முறையாக உணவு சமைத்துப் போட்டாளும். பாவேந்தருக்கு என்புருக்கி வந்தபோது வயது 68. என்புருக்கி நோய் வந்து தப்பிப் பிழைத்தவர் கள் பிறகு மிகவும் எச்சரிக்கையோடு இருப்பார்கள். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் கூட இந்த நோயைச் சாக்கிட்டு அக்கொடிய பழக்கத்தை விட்டுவிடுவார்கள். ஆனல் பாவேந்தர் எதையும் விடவில்லை. சென்னைத் தியாகராயர் நகரில் இருந்தபோது இவர் சிகரெட்டும் சுருட்டும் மாற்றி மாற்றி ஓயாமல் குடித்துக் கொண்டிருப் பார்; போதாக் குறைக்குப் பொடியும் போடுவார். தாம் பூலம் சுவைக்கும் வ ழ க்க மு ம் அவரிடம் அப்போது இருந்தது.