பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/64 நிதியளிப்பு விழா முடிவில் நான் பேசியபோது, 'என்னை மக்கள் ஏன் போற்றுகிருர்கள்? பாராட்டுகிருர்கள்? பொற் கிழியளிக்கிருர்கள்? என்னுடைய அஞ்சாமைதான் கார ணம். மடமையை ஆதரித்தும் என்னை எதிர்த்தும் பேசுப வர்களைக் கண்டு நான் அஞ்சாமல் திட்டுவேன். நீங்களும் திட்டுங்கள். தமிழனை, தமிழன் பண்பாட்டினை இகழ்பவர் களை நீங்களும் திட்டுங்கள். 'நண்பர் சிலரும் நமக்கு உறவுபோல் இருந்து நம் காலை வாரி விடுவார்கள். இதோ எதிரில் அமர்ந்திருக்கும் சாமி. சிதம்பரம் அத்தகைய நண்பர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. என் நூலுக்கு இவர் கொடுத்த முன்னுரையில் பஃருெடை வெண்பா 14 வரிகளுக்கு மேல் கிடையாது என்றும் பாரதி தாசன் அதற்கு மேல் எழுதியிருக்கிருர் என்றும் சொல்லிக் குற்றம் சாட்டியிருக்கிருர். இதன் உள்நோக்கம் என்ன? எதையாவது சொல்லி என்னுடைய புகழ்மீது சேற்றை அள்ளிப் பூசவேண்டும் என்பது அவர்நோக்கம். இவரை நாமெல்லாரும் தமிழறிஞர் என்று ஒரு முகமாக ஒத்துக் கொண்டிருக்கிருேம். சமண ராமாயணம் ஒன்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பல ஆயிரம் வரிகள் கொண்ட பஃருெடை வெண்பாவால் ஆகிய நூல். இதைச் சாமி. சிதம்பரம் அறிந்திருந்தால் அப்படி எழுதியிருக்க மாட் டார்' என்று அஞ்சாமல் எடுத்துரைத்தேன். அப்போது மேடையில் காஞ்சி பொன்னப்பனும் அமர்ந்திருந்தார். இரா.பி.சேதுப்பிள்ளைபோன்ற தமிழறிஞர்களும் வந்திருந் தனர். விழாத் தலைமை தாங்கிய ச.சோ. பாரதியார் சாமி. சிதம்பரத்தைப் பார்த்து 'என்னையா உம்மைக் கவிஞருக்கு நண்பரென்று நினைத்திருந்தோம். சமயத்தில் காலை வாரி யிருக்கிறீரே!” என்று கேட்டார். சாமி. சிதம்பரம் கூட் டத்தை விட்டு எழுந்து போய்விட்டார். மறுநாள் காலை 10மணியளவில் நான் தங்கியிருந்த இடத் துக்குச் சாமி. சிதம்பரம் வந்தார். 'பஃருெடை வெண் பாவின் இலக்கணம்பற்றிப் பிறகுதான் அறிந்து கொண்