பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/66 நான்கு ஆண்டுகளுக்கு முன் பெங்களுரில் நடைபெற்ற குறள் மாநாடு ஒன்றுக்கு நான் தலைமை தாங்கினேன். அந்த மாநாட்டில் உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை, டாக்டர் மா. இராசமாணிக்கம், மயிலை மடம் தமிழ்க் கல்லூரித் தலைவர் துரைசாமி ஐயா ஆகிய தமிழ றிஞர்களும் கலந்து கொண்டனர். அப்போது அந்த மாநாட்டில் குழப்பம் செய்வதற்கென்றே ஓர் ஆத்திகக் கூட்டம் வந்திருந்தது. நான் துவக்கவுரையாற்றிக் கொண்டிருந்தேன். அப் போது உடம்பெல்லாம் பட்டை பட்டையாகத் திருநீறு பூசிய ஒரு தடித்த சைவர் எழுந்து நின்று, 'பெரியார் இராமாயணத்தை எரிக்க வேண்டுமென்கிருர், ராதா இராமாயணத்தை இழிவுபடுத்திக் கீமாயணம் நடத்து கிருர். இராமன் கடவுள் அல்லளுே? இவ்வாறெல்லாம் செய்வது முறையா? என்று தொடர்பில்லாமல் கேள்வி கள் கேட்டார். அவர் கேள்வி கேட்ட முறையிலிருந்தே அவர் கலவரம் செய்வதற்காகவே வந்த வீரசைவர் என் பதை நான் புரிந்து கொண்டேன். எப்போதுமே கருத்துச்சண்டையென்ருலும் கைச்சண்டை யென்ருலும் விரும்பி வரவேற்கும் பண்புடையவன் நான். வாலை மிதித்தால் வரிப்புலி சும்மா இருக்குமா? எனக்குக் கோபம் கொப்பளித்தது. கேள்வி கேட்ட அந்தச் சைவரைப் பார்த்து 'நீர் உண்மையான சைவரா?' என்று கேட்டேன். "ஆமாம்! அதிலென்ன ஐயம்?' என்ருர் அவர். 'சிவஞான சித்தியார் படித்திருக்கிறீரா?' என்று அவரை நான் அடுத்த கேள்வி கேட்டேன். 'படித்திருக்கிறேன்' என்று ുകേrg கூறிஞர் சைவர்.