பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/67 'அருள்நந்தி சிவாச்சாரியார் ஒரு வைணவனை முன்னிலைப் படுத்திக் கூறிய பாடல் தெரியுமா?’ என்று அடுத்த கேள்வி கேட்டேன். நான் நூலுக்குள் இறங்கியவுடனே அச் சைவருக்கு உதறல் எடுக்கத் தொடங்கி விட்டது. ‘மாயை கடவுளுக்குக் கிடையாது. மாயையில் சிக்கி, மாயமான் பின்னல் ஓடி, மனைவியை இழந்து தவித்த இராமன் கடவுள் ஆகமாட்டானென்று சிவஞான சித்தி யார் தெளிவாகக் கூறுகிறது என்று எடுத்து விளக்கிக் கீழ்க்கண்ட அப்பாடலையும் சொன்னேன்: மாயமான் தன்னைப் பொய்மான் எனஅறி யாத ரக்கன் மாயையில் அகப்பட் டுத்தன் மனைவியை இழந்தான் தன்னை மாயைக்குக் கர்த்தா என்பை மதிகெட்டங் கவனைக் கொன்று காயனர் தமைப்பூ சித்தான் கொலைப்பழி கணுகி டாமே. இப்பாடலை எடுத்துக் கூறி, ‘இராமன் கடவுளல்லன் என்பதற்குச் சைவர்கள் எல்லாரும் உயர்வாக மதித்துப் போற்றும் சிவஞான சித்தியாரில் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் சான்றிருக்கிறது. அருள்நந்தி சிவாச்சாரியார் சுயமரியாதைக்காரரா? சைவ ஆகமங்கள் என்ன கூறு கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் உடம்பெல் லாம் பட்டை பட்டையாகத் திருநீற்றைப் பூசிக்கொண்டு வந்தால் போதுமா?’ என்று சரமாரியாகப் பேசினேன். கேள்வி கேட்ட சைவர் திணறிப்போய் செய்வதறியாமல் உட்கார்ந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து நான் மேடையை விட்டு இறங்கியதும் அவரும் அவருடன் வந்த வேறு சில சைவர்களும் என்னிடம் வந்து, 'உங்கள் புலமையை அறியாமல் நாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டோம்; எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று கூறினர். -