பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/70 ஆகும் போதெல்லாம் அந்த மேலாளர் நடுக்கொள்ளை அடிப்பது வழக்கம். இது டி.ஆர். சுந்தரத்துக்குத் தெரி யாது. நான் ஓர் அவசர வேலையாகப் புதுவை சென்றிருந்த போது பணம் தேவைப்பட்டது. உடனே டி. ஆர். சுந்தரத் துக்குக் கடிதம் எழுதி ரூ.1000/-முன் பணமாகக் கொடுக்க வேண்டுமென்று கேட்டிருந்தேன். அவர் பத்து நூறு ரூபாய் நோட்டுக்களைத் தன் மேலாளரிடம் கொடுத்து எனக்கு அனுப்பி விடுமாறு கூறினர். அவர் அவற்றுள் ஒரு நோட்டை எடுத்துக் கொண்டு மீதி ரூ 900/-த்தையும் எனக்கு அனுப்பி வைத்தார். அதில் ரூ 100/- எடுத்துக் கொண்டதாக ஒரு குறிப்பும் எழுதி வைத்திருந்தார். நான் அந்தக் குறிப்பைப் பத்திரமாக எடுத்துவைத்துக் கொண் டேன். நான் சேலம் வந்ததும் நேராக டி.ஆர். சுந்தரம் பங்களா விற்குப் போனேன். ஒப்பந்தம் எழுதிக் கையெழுத்துப் போட்டு விட்டு வெளியே வந்தேன். மற்ற எழுத்தாளர் கள் செய்வது போல், நானும் அந்த மேலாளரை உடன் அழைத்துச் செல்லாததால் அவருக்கு என்மேல் எரிச்சல்! நடுக்கொள்ளைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என்று கோபம். இந்தச் செய்தியை முன்கூட்டியே சொல் லாமல் இருந்ததற்காக எனக்குப் பணியாளாக இருந்த சிறுவனை அந்த மே ல | ள ர் நையப் புடைத்து விட்டார். அந்தப் பையன் அழுதுகொண்டு நேராக டி.ஆர்.எஸ். பங்களாவுக்கு வந்தான். பங்களா வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்தவன் அந்த மேலாளரின் கையாள். அவன் அந்தச் சிறுவன உள்ளே விட மறுத்து விட்டான். நான் வெளியே வந்ததும் அப்பையன் அழுது கொண்டே நடந்ததைச் சொன்னன். என் சினமெல்லாம் அச்சிறுவனை உள்ளேவிட மறுத்த வாயிற்காவலன் மேல் திரும்பியது. என் கோபம் தீரும்வரை அவனை விளாசி னேன். அவன் அடி பொறுக்காமல் கூக்குரலிட்டதும்