பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/74 நான் பேசத் தொடங்குவதற்கு முன்பு தலைவர் எனக்கு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கியிருப்பதாகச் சொன்னர். நான் என்னுடைய தலைப்பைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு ‘நான் புதுவையிலிருந்து வந்திருக்கிறேன். ஏன் பேச்சுக்கு ஐந்து நிமிடமாம்; அதுவும் நான் ஜாக்கிரதையாகப் பேச வேண்டுமாம்; இல்லாவிட்டால் என்னைக் கூண்டில் அடைத்து விடுவார்களாம்’ என்று தொடங்கினேன். ஐந்து நிமிடம் ஆனதும் தேவி என்னை உட்காரும்படி கையமர்த் திக்காட்டினர். உடனே நான் கோபத்தோடு மேடையை விட்டு இறங்கி என். எஸ். கே. வீட்டுக்குச் சென்று விட்டேன். அங்கு திரளாகக் கூடியிருந்த மக்கள் நான் இறங்கிச் செல்லும்போது கூச்சலிட்டுத் தடுத்தனர். ஒரு பெருங் கூட்டம் எழுந்து என்னைத் தொடர்ந்து என்.எஸ். கே வீட்டுக்கு வந்து விட்டது. பகலில் மாநாட்டு நிகழ்ச்சி கள். எல்லாம் முடிவுற்றன. இரவு என்.எஸ். கே.யின் கலை நிகழ்ச்சி நிகழவிருந்தது. திரளாகக் கூடியிருந்த மக்களைப் பார்த்துக் கலைவாணர், 'தோழர்களே! இந்நிகழ்ச்சிக்கு நான் தலைவன்; கவிஞர் பாரதிதாசன் சொற்பொழிவாளர். கவிஞர் பேசியதுபோக நேரம் மிச்சமிருந்தால் என்னுடைய கலைநிகழ்ச்சி நடை பெறும் என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டார். மக்கள் எனக்கு வேண்டிய அளவு சிறப்புச் செய்தனர். மேசை நிறைய மாலைகள் குவிந்தன. நான் மேடையில் என் ஆத்திரம் தீரும் வரையில் பேசி னேன். 'என்னைக் கூண்டில் அடைக்க எவனும் பிறக்க வில்லை. மட்டரகமான எண்ணங்களையெல்லாம் மாற்றிக் கொள். நீ படித்திருக்கும் அளவு உன்னிடத்தில் பண் பில்லை. உள்ளுர் என்ற தைரியமா? என்று பேசினேன். பிறகு ஒரு மணி நேரம் என் தலைப்பையொட்டிப் பேசி னேன். மக்கள் அமைதியாகக் கேட்டனர். அதன் பிறகு என்.எஸ்.கேயின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.'