பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/76 ஒரு நாள் பாவேந்தரைப் பார்ப்பதற்காக ஒரு விலங்கு மருத்துவர் (B.V.Sc.) வந்திருந்தார். அவர் கோழி களைப் பார்த்துவிட்டு, "கோழிகளையெல்லாம் இப்படி வளர்க்கக் கூடாது. அவைகளுக்கு நோய் வந்துவிடும். அவைகள் உட்காருவதற்கும், இரையுண்ணுவதற்கும் கோழிப் பண்ணைகளில் இரும்பில் செய்த சாமான்கள் இருக்கின்றன’’ என்று பேச்சுவாக்கில் சொன்னர். அடுத்த நாள் வெளியில் சென்ற பாவேந்தர் கோழிப் பண்ணையிலிருந்து அந்தப் பொருள்களையெல்லாம் வாங் கிக்கொண்டு வந்துவிட்டார். அவற்றின் விலை ரூ.50/-க்கு மேல் இருக்கும். அப்போது பாவேந்தருக்கு இருந்த பணத்தொல்லையில் அவர் ரூ. 50/- செலவிடவேண்டிய தில்லை. அவர் வீட்டிலிருந்த கோழிகளும் பேசாமல் நிலத் திலேயே இரையெடுத்துக் கொண்டு உடல் நலத்தோடு நன்ருகத் தான் இருந்தன. பாவேந்தரை யார் தடுக்க முடியும்? பாவேந்தருக்குப் புருக்களையும் கோழிகளையும் வளர்ப்ப தில் அளவு கடந்த விருப்பம். இவை கூடி இரையுண்ணும் அழகை விருப்பத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார். இந்த விருப்பத்தின் வி ளே வு தா ன் அவர் நமக்குப் படைத்துக் கொடுத்த 'புருக்கள் கோழிகள் பற்றிய அழகான பாடல்கள். [T] 24–4—62 சனி 口 இன்று பாவேந்தர் இல்லத்தில் பல அறிஞர்களைச் சந்திக் கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது, அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் காலஞ்சென்ற தமிழ்மறவர் பொன்னம்பலஞர்